Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

தனக்கு எதிரான சதியை அறியாமல் இருந்த கோட்டா?

T

The Leader Desk

ஜனவரி 25, 2023 • 6:41 AM

தனக்கு எதிரான சதியை அறியாமல் இருந்த கோட்டா?   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அமைச்சர்கள் சிலரும் இதில் ஈடுபட்டதாகவும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
  • யார் நாட்டுக்கு சேவையாற்றினார்கள், யார் நாட்டை சீரழித்தார்கள் என்பதை இருமுறை சிந்தித்து மக்கள் வாக்களிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
  • அதனை மக்கள் தற்போது தெளிவாக உணர்ந்துள்ளதாகவும், எதிர்காலத்தில் இவ்வாறான நபர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
எழுத்து அளவு:

அமைச்சர்கள் சிலரும் இதில் ஈடுபட்டதாகவும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

அதனை மக்கள் தற்போது தெளிவாக உணர்ந்துள்ளதாகவும், எதிர்காலத்தில் இவ்வாறான நபர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், தமக்கு எதிராக சதித்திட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளதாகவும் அதனால்தான் அவர் வெளியேற வேண்டியிருந்தது என்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஒப்புக்கொள்ளத் தயங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் எரிபொருள் தட்டுப்பாட்டு காலத்தில் இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருள் அளவே தற்போதும் இறக்குமதி செய்யப்படுவதாகவும் ஆனால் தற்போது எவ்வித பற்றாக்குறையும் இல்லை என்றும் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மொட்டு சின்னத்திற்கு வாக்களிப்பதை தவிர மக்களுக்கு மாற்று வழிமுறை ஏதும் கிடையாது எனவும் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

யார் நாட்டுக்கு சேவையாற்றினார்கள், யார் நாட்டை சீரழித்தார்கள் என்பதை இருமுறை சிந்தித்து மக்கள் வாக்களிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனநாயகம் மற்றும் மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கு மதிப்பளித்து செயற்படுகிறது எனவும் சாகர காரியவசம் கூறியுள்ளார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பொதுஜன பெரமுன மாறுப்பட்ட பொதுச் சின்னத்தில் போட்டியிடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாட்டுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

ஆகவே மக்களுக்கு மாற்று வழியேதும் கிடையாது எனவும் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

இடம்பெறவுள்ள உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றிப்பெறும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

தனக்கு எதிரான சதியை அறியாமல் இருந்த கோட்டா? | Tamil Leader | We Lead the Nation