Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

சரணடைந்தவர்கள் தொடர்பில் இன்று தகவல் வெளியாகுமா?

T

The Leader Desk

ஜனவரி 25, 2023 • 6:31 AM

சரணடைந்தவர்கள் தொடர்பில் இன்று தகவல் வெளியாகுமா?

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஆணைக்குழுவில், இலங்கை இராணுவத்துக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீடு தொடர்பான விசாரணை இன்று (25) நடைபெற உள்ளது.
  • இறுதி யுத்தக் காலப் பகுதியில் இலங்கை இராணுவத்திடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பில் 06 கேள்விகளைக் கொண்ட RTI விண்ணப்பம் இராணுவத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
  • எனினும், இராணுவம் பொய் கூறுவதாக சுட்டிக்காட்டி இராணுவத்திடம் புலிகள் சரணடைந்தமைக்கான ஆதாரங்கள் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டது.
  • பதில் எழுத்துமூல சமர்ப்பணத்தை வழங்க 01.2023ஆம் திகதி வரை காலஅவகாசத்தை இராணுவம் கோரியது.
எழுத்து அளவு:

ஆணைக்குழுவில், இலங்கை இராணுவத்துக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீடு தொடர்பான விசாரணை இன்று (25) நடைபெற உள்ளது.

இராணுவத்துக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீடு தொடர்பான தகவல்கள் சுருக்கமாக கீழே வழங்கப்பட்டுள்ளது.

  1. 04.04 – இறுதி யுத்தக் காலப் பகுதியில் இலங்கை இராணுவத்திடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பில் 06 கேள்விகளைக் கொண்ட RTI விண்ணப்பம் இராணுவத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
  2. 06.2019 – “இறுதி யுத்தக் காலப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் எவரும் இராணுவத்திடம் சரணடையவில்லை. இலங்கை அரசாங்கத்திடமே சரணடைந்தனர்.” என இராணுவம் பதில் வழங்கியிருந்தது.
  3. 10.2019 – இராணுவம் வழங்கிய பதிலில் திருப்தியில்லை என்பதால், இலங்கை தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவில் மேன்முறையீடு செய்யப்பட்டது.
  4. 11.2022 – மூன்று வருடங்களுக்குப் பின்னர் இந்த மேன்முறையீடு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது ஆணைக்குழு முன்பாக சாட்சியம் வழங்கியிருந்த இராணுவம் தங்களிடம் புலிகள் எவரும் சரணடையவில்லை எனவும், சரணடைந்தவர்கள் தொடர்பான தகவல்கள் எதுவும் தம்மிடம் இல்லை என்றே கூறியிருந்தது.

எனினும், இராணுவம் பொய் கூறுவதாக சுட்டிக்காட்டி இராணுவத்திடம் புலிகள் சரணடைந்தமைக்கான ஆதாரங்கள் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டது. இதனை ஆராய்ந்த ஆணைக்குழு மேன்முறையீட்டாளர் எழுத்துமூல சமர்ப்பணம் ஒன்றை வழங்க வேண்டுமெனவும் அதற்குப் பதில் எழுத்துமூல சமர்ப்பணம் ஒன்றை இராணுவம் வழங்க வேண்டுமெனவும் உத்தரவிட்டிருந்தது.

  1. 12.2022 – மேன்முறையீட்டாளரால் நீண்ட எழுத்துமூல சமர்ப்பணம் இலங்கை இராணுவத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
  2. 01.2023 – மீண்டும் இந்த மேன்​முறையீடு ஆணைக்குழு முன்பாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. பதில் எழுத்துமூல சமர்ப்பணத்தை வழங்க
  3. 01.2023ஆம் திகதி வரை காலஅவகாசத்தை இராணுவம் கோரியது.
  4. 01.2023ஆம் திகதிக்கு முன்னர் பதில் எழுத்துமூல சமர்ப்பண்தை வழங்க வேண்டுமென ஆணைக்குழு இராணுவத்துக்கு உத்தரவிட்டது.
  5. 01.2023 – 2,253 பக்கங்களைக் கொண்ட நீண்ட பதில் எழுத்துமூல சமர்ப்பணத்தை இராணுவம் வழங்கியது.
  6. 01.2023 – இராணுவம் வழங்கிய பதில் எழுத்துமூல சமர்ப்பணத்தில் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட 06 கேள்விகளுக்கும் பதில் இல்லை என ஆணைக்குழுவுக்கும், இராணுவத்துக்கும் எழுத்துமூல சமர்ப்பணம் ஒன்று மேன்முறையீட்டாளரால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.



இந்தநிலையில் 25.01.2023 – நாளை மீண்டும் இது தொடர்பிலான விசாரணை நடைபெற உள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...