Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

கறுப்பு ஜனவரி; சுகிர்தராஜன், லசந்த, எக்னெலிகொட நினைவுதினங்கள்

T

The Leader Desk

ஜனவரி 25, 2023 • 6:15 AM

கறுப்பு ஜனவரி; சுகிர்தராஜன், லசந்த, எக்னெலிகொட நினைவுதினங்கள்   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஊடகவியலாளர் சுப்ரமணியம் சுகிர்தராஜனின் 17ஆவது ஆண்டு நினைவு நிகழ்வும் கறுப்பு ஜனவரி நினைவேந்தல் நிகழ்வும் முல்லைத்தீவு ஊடக அமையத்தில் நேற்று (24) இடம்பெற்றது.
  • இலங்கையில் பல்வேறு ஆண்டுகளில் ஜனவரி மாதத்தில் கொல்லப்பட்ட கடத்தி காணாமல் ஆக்கப்பட்டிருந்த ஊடகவியலார்களை நினைவிலிருத்தி இதற்க்கு நீதி வேண்டி கறுப்பு ஜனவரி ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக அமைப்புகளால் அனுஷ்ட்டிக்கபடுவது வழமை.
  • அத்தோடு முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு நகரங்களில் கறுப்பு ஜனவரியை அடையாளப்படுத்தி முல்லைத்தீவு ஊடகவியலாளர்கள் துண்டு பிரசுரமும் விநியோகித்தமை குறிப்பிடத்தக்கது.
எழுத்து அளவு:

ஊடகவியலாளர் சுப்ரமணியம் சுகிர்தராஜனின் 17ஆவது ஆண்டு நினைவு நிகழ்வும் கறுப்பு ஜனவரி நினைவேந்தல் நிகழ்வும் முல்லைத்தீவு ஊடக அமையத்தில் நேற்று (24) இடம்பெற்றது.

இலங்கையில் பல்வேறு ஆண்டுகளில் ஜனவரி மாதத்தில் கொல்லப்பட்ட கடத்தி காணாமல் ஆக்கப்பட்டிருந்த ஊடகவியலார்களை நினைவிலிருத்தி இதற்க்கு நீதி வேண்டி கறுப்பு ஜனவரி ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக அமைப்புகளால் அனுஷ்ட்டிக்கபடுவது வழமை.

அந்தவகையில், இதே நாளில் 2010ஆம் ஆண்டு கடத்தி காணாமல் ஆக்கப்பட்டிருந்த ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவுக்கு நீதி வேண்டியும் இதே ஜனவரி மாதம் 08ஆம் நாள் ஒன்றில் 2009ஆம் ஆண்டு சுட்டுப் படுகொலை செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவுக்கு அஞ்சலி செலுத்தியும் இந்த கறுப்பு ஜனவரி நிகழ்வு முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இடம்பெற்றது.

இதில் முல்லைத்தீவு ஊடகவியலார்கள் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலார்கள் சுகிர்தராஜன் மற்றும் லசந்த ஆகியோரின் திருவுருவ படங்களுக்கு சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தியதோடு இன்றையநாளில் 2010 இல் காணாமல் ஆக்கப்பட்டிருந்த பிரகீத் எக்னெலிகொடவுக்கு நீதி வேண்டி அவரது படத்தை தாங்கி மெழுகுவர்த்தி கையில் ஏத்தி நினைவுகூர்ந்தமை குறிப்பிடத்தக்கது.

அத்தோடு முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு நகரங்களில் கறுப்பு ஜனவரியை அடையாளப்படுத்தி முல்லைத்தீவு ஊடகவியலாளர்கள் துண்டு பிரசுரமும் விநியோகித்தமை குறிப்பிடத்தக்கது.



jds s 1

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

கறுப்பு ஜனவரி; சுகிர்தராஜன், லசந்த, எக்னெலிகொட நினைவுதினங்கள் | Tamil Leader | We Lead the Nation