Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

பரீட்சை காலத்தில் மின்வெட்டு; விளக்கம் கேட்கிறது ஆணைக்குழு

T

The Leader Desk

ஜனவரி 24, 2023 • 4:15 PM

பரீட்சை காலத்தில் மின்வெட்டு; விளக்கம் கேட்கிறது ஆணைக்குழு

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தொடர்பில் நாளை (25) விளக்கமளிக்குமாறு, மின்சக்தி அமைச்சின் செயலாளர் மற்றும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இன்று நடைபெற்ற அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
  • ஜனவரி மாதத்தில் மின்சார உற்பத்திக்காக 38 பில்லியன் நிலக்கரி செலவழிக்கப்பட்டதாகவும், இனி அவ்வாறு செய்ய முடியாது என்றும் அவர் கூறினார்.
எழுத்து அளவு:

தொடர்பில் நாளை (25) விளக்கமளிக்குமாறு, மின்சக்தி அமைச்சின் செயலாளர் மற்றும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

உயர்தர பரீட்சை நடைபெறும் ஜனவரி 23 ஆம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 17ஆம் திகதி வரையான காலத்தில் மின்வெட்டைத் தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மனித உரிமைகள் ஆணைக்குழு கடந்த 23 ஆம் திகதி மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் மற்றும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவருக்கு அறிவித்திருந்தது.

ஆனால் இரு தரப்பிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அவதானித்துள்ளது. இதன்படி, சம்பவம் தொடர்பில் விசாரிப்பதற்காக நாளை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு இரு தரப்பினருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு பணம் கிடைக்காவிட்டால் மீண்டும் பத்து அல்லது பன்னிரண்டு மணித்தியாலங்களுக்கு மின்சாரத்தை துண்டிக்க நேரிடும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதுபோன்று மின்சாரம் துண்டிக்கப்பட்டால் மக்கள் நிர்க்கதிக்கு ஆளாக நேரிடும் என்றும் மின் கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அவர் கூறினார்.

ஜனவரி மாதத்தில் மின்சார உற்பத்திக்காக 38 பில்லியன் நிலக்கரி செலவழிக்கப்பட்டதாகவும், இனி அவ்வாறு செய்ய முடியாது என்றும் அவர் கூறினார்.

மேலும் பணம் இல்லை, கடன் பெற முடியாது என்பதால் மின் கட்டண உயர்வை கண்டிப்பாக செய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

பரீட்சை காலத்தில் மின்வெட்டு; விளக்கம் கேட்கிறது ஆணைக்குழு | Tamil Leader | We Lead the Nation