Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

'கடனில் உள்ள இலங்கைக்கு உதவ இந்தியா உறுதியளித்துள்ளது'

T

The Leader Desk

ஜனவரி 24, 2023 • 9:49 AM

'கடனில் உள்ள இலங்கைக்கு உதவ இந்தியா உறுதியளித்துள்ளது'   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நாடான இலங்கையின் கடன் சுமையை குறைக்க இந்தியா உறுதியளித்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
  • இலங்கை கடனாக 2.9 பில்லியன் டொலரைக் கோருகின்ற நிலையில், இலங்கையின் கடன் மறுசீரமைப்புத் திட்டத்தை வலுவாக ஆதரிப்பதாக இந்தியா, சர்வதேச நாணய நிதியத்திடம் கூறியதாக கடந்த வாரம் ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டது.
  • அதன்படி, இலங்கை பாரிஸ் கிளப் உறுப்பினர்களான இந்தியா, ஜப்பான், சீனாவுடன் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தது.
எழுத்து அளவு:

நாடான இலங்கையின் கடன் சுமையை குறைக்க இந்தியா உறுதியளித்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

இலங்கை கடனாக 2.9 பில்லியன் டொலரைக் கோருகின்ற நிலையில், இலங்கையின் கடன் மறுசீரமைப்புத் திட்டத்தை வலுவாக ஆதரிப்பதாக இந்தியா, சர்வதேச நாணய நிதியத்திடம் கூறியதாக கடந்த வாரம் ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டது.

இந்நிலையில் மற்ற இருதரப்பு கடன் வழங்குநர்களுடன் இதேபோன்ற உத்தரவாதங்களை பெற்றுக்கொள்ள பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது. அதன்படி, இலங்கை பாரிஸ் கிளப் உறுப்பினர்களான இந்தியா, ஜப்பான், சீனாவுடன் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தது.

ஏற்கனவே ஜப்பானுடன் பேச்சுவார்த்தைகளை முடித்துவிட்டதாக அரசாங்கம் அறிவித்துள்ள அதேவேளை, பாரிஸ் கிளப் உறுப்பினர்களுடன் இந்த வாரம் ஒரு சுற்று பேச்சுவார்த்தை நடத்தப்படும் என நிதி அமைச்சு உறுதிப்படுத்தியது.

அவர்களிடம் இருந்து போதுமான உத்தரவாதங்கள் பெறப்பட்டு, மீதமுள்ள தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டவுடன், கடனுதவி திட்டத்தை பரிசீலிக்கும்படி சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழுவின் அங்கீகாரத்திற்கு சமர்ப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏழு தசாப்தங்களில் ஏற்பட்ட மோசமான நிதி நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு அவசியமான சர்வதேச நாணய நிதியத்துடன் இறுதி உடன்படிக்கையை எட்டுவதற்கு, சீனா மற்றும் இந்தியாவின் ஆதரவு இலங்கைக்கு தேவைப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...