Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

பாகிஸ்தானின் அப்துல் ரஹ்மான் மக்கி சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பு

T

The Leader Desk

ஜனவரி 17, 2023 • 5:37 AM

பாகிஸ்தானின் அப்துல் ரஹ்மான் மக்கி சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பு   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இவர் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத்தின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.
  • இந்தியாவில் 2011 நவம்பர் 26ல் நடந்த மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத்தின் மைத்துனர் தான் இந்த அப்துல் மக்கி.
  • பாதுகாப்பு கவுன்சில் கமிட்டி பல்வேறு பிரகடனங்களையும் பரிசீலனையில் கொண்டு அப்துல் ரஹ்மான் மக்கியை சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்துள்ளது.
எழுத்து அளவு:

இவர் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத்தின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கமிட்டி பல்வேறு பிரகடனங்களையும் பரிசீலனையில் கொண்டு அப்துல் ரஹ்மான் மக்கியை சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்துள்ளது.

அப்துல் ரஹ்மான் மக்கியை ஏற்கெனவே இந்தியா , அமெரிக்காவும் தேடப்படும் பயங்கரவாதியாக அறிவித்துள்ளது. அப்துல் மக்கி பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்ப்பது, நிதி திரட்டுவது, இளைஞர்கள் மத்தியில் உரையாற்றி அவர்களை மூளைச்சலவை செய்து தாக்குதலுக்கு தயாராக்குவது. குறிப்பாக இந்தியா மற்றும் ஜம்மு காஷ்மீரில் தாக்குதல் நடத்த இளைஞர்களைத் தூண்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.

இந்தியாவில் 2011 நவம்பர் 26ல் நடந்த மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத்தின் மைத்துனர் தான் இந்த அப்துல் மக்கி. லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்புக்கு தேவையான அனைத்து நிதி ஆதாரங்களையும் திரட்டுவதில் இவர் முக்கியப் பங்கு செலுத்தி வருகிறார்.

2020 ஆம் ஆண்டு பாகிஸ்தானின் பயங்கரவாத தடுப்புக் குழு மக்கியை குற்றவாளி என அறிவித்து சிறைத் தண்டனை விதித்தது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் மக்கியை சர்வதேச பயங்கரவாதியை அறிவித்தாலும் கூட சீனா பல தருணங்களில் பாகிஸ்தானை சேர்ந்தவர்களை சர்வதேச பயங்கரவாதிகளாக அறிவிக்க முட்டுக்கட்டை போட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீனா மக்கியை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க முட்டுக்கட்டை போட்டது. இந்நிலையில் இப்போது மக்கியை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்துள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

பாகிஸ்தானின் அப்துல் ரஹ்மான் மக்கி சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பு | Tamil Leader | We Lead the Nation