Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

'முதுகெலும்புள்ள தலைவர் எமக்கு இல்லை'

T

The Leader Desk

ஜனவரி 16, 2023 • 5:01 AM

'முதுகெலும்புள்ள தலைவர் எமக்கு இல்லை'   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஆக்கப்பட்டோரின் உறவுகள் தெரிவித்துள்ளனர்.
  • காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் குழந்தைகளை கண்டறியவும் எதிர்கால இனப்படுகொலையில் இருந்து தமிழர்களை காக்க கோரியும் வவுனியா பிரதான தபாலகத்திற்கு அருகாமையில் தொடர்ச்சியான போராட்டத்தின் 2156 நாளாக போராடி வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளே இவ்வாறு தெரிவித்தனர்.
  • சுமார் 2 வாரங்களுக்கு முன்னர், இலங்கையின் முன்னாள் இரண்டு ஜனாதிபதிகளுக்கு கனடா தடை விதித்தது.
  • இவையெல்லாம் நம் மக்களுக்கு என்ன சொல்கின்றன?
எழுத்து அளவு:

ஆக்கப்பட்டோரின் உறவுகள் தெரிவித்துள்ளனர்.

காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் குழந்தைகளை கண்டறியவும் எதிர்கால இனப்படுகொலையில் இருந்து தமிழர்களை காக்க கோரியும் வவுனியா பிரதான தபாலகத்திற்கு அருகாமையில் தொடர்ச்சியான போராட்டத்தின் 2156 நாளாக போராடி வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளே இவ்வாறு தெரிவித்தனர்.

பண்டைய தமிழ் இறையாண்மை பொங்கல் வேண்டும் வேண்டும் என தெரிவித்து நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்திலேயே இவ்வாறு தெரிவித்தனர்.

தொடர்தும் அங்கு கருத்து தெரிவித்த கோ.ராஜ்குமார், “இரண்டு முக்கிய இராணுவ மேஜர்கள் மீது அமெரிக்கா சமீபத்தில் பயணத் தடையுடன் வேறு பல நிபந்தனைகளை விதித்தது. சுமார் 2 வாரங்களுக்கு முன்னர், இலங்கையின் முன்னாள் இரண்டு ஜனாதிபதிகளுக்கு கனடா தடை விதித்தது.

இந்த இரண்டு ஜனாதிபதிகளுடன் தொடர்புள்ள எந்தவொரு கனேடியர்களும் தண்டிக்கப்படுவார்கள் என்பது மிகவும் கவனிக்கத்தக்கது. இவையெல்லாம் நம் மக்களுக்கு என்ன சொல்கின்றன?
உலகமே தமிழர்களின் பின்னால் நிற்கிறது, ஆனால் முதுகெலும்புள்ள தலைவர் எமக்கு இல்லை.

எமது தாய்மார்களுடன் இணைந்து தமிழ் இறையாண்மைக்காக யாரேனும் ஒருங்கிணைத்து குரல் கொடுக்க வேண்டும் என விரும்புகிறோம்.

இறையாண்மை என்பது ஒரு கெட்ட வார்த்தை அல்ல, அது ஒரு நட்பான எளிமையான சுதந்திர வார்த்தை.

குறிப்பாக அமெரிக்காவுடன் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்தை வலியுறுத்துமாறு எமது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை வலியுறுத்துகிறோம்.கொழும்பைக் கண்டு பயந்தால் அமெரிக்காவிடம் பேசுங்கள்.

சீன ஆதிக்கத்தை ஒடுக்க அமெரிக்கத் தலைமையுடன் இந்தியப் பெருங்கடலைப் பாதுகாக்கும் நாடுகள் “குக்” தீவுகளுக்கு இறையாண்மையை வழங்கின.இங்கும் இறையாண்மைக்கான வலுவான சாத்தியம் உள்ளது” என தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...