Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

'நட்டஈடு செலுத்த என்னிடம் சொத்து இல்லை'

T

The Leader Desk

ஜனவரி 16, 2023 • 4:56 AM

'நட்டஈடு செலுத்த என்னிடம் சொத்து இல்லை'

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மில்லியன் ரூபா பணத்தை நட்டஈடாக வழங்குவதற்கு தன்னிடம் பணம் இல்லையென முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
  • இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் தொடர்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட 5 பேர் அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
  • அதேநேரம், முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன 100 மில்லியன் ரூபா நஷ்ட ஈடு செலுத்த வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
  • இந்த நிலையிலேயே 100 மில்லியன் ரூபா பணத்தை செலுத்துவதற்கு தன்னிடம் சொத்து இல்லை என்றும் அந்த நட்டஈட்டு தொகையை திரட்டுவதற்கு புறக்கோட்டையில் உள்ள அரச மரத்தடியில் இருக்க வேண்டுமா எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.
எழுத்து அளவு:

100 மில்லியன் ரூபா பணத்தை நட்டஈடாக வழங்குவதற்கு தன்னிடம் பணம் இல்லையென முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

எனினும் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு தான் தலைவணங்குவதாக நிட்டம்புவ விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கூறினார்.

இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் தொடர்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட 5 பேர் அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அதேநேரம், முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன 100 மில்லியன் ரூபா நஷ்ட ஈடு செலுத்த வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையிலேயே 100 மில்லியன் ரூபா பணத்தை செலுத்துவதற்கு தன்னிடம் சொத்து இல்லை என்றும் அந்த நட்டஈட்டு தொகையை திரட்டுவதற்கு புறக்கோட்டையில் உள்ள அரச மரத்தடியில் இருக்க வேண்டுமா எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.

தானும், தனக்கு நெருக்கமானவர்களும் இணைந்து பணத்தை சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...