Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

மைத்திரி உட்பட பல முக்கியஸ்தர்களுக்கு எதிரான ஈஸ்டர் குண்டத் தாக்குதல் வழக்கின் தீர்ப்பு இன்று

T

The Leader Desk

ஜனவரி 12, 2023 • 4:01 AM

மைத்திரி உட்பட பல முக்கியஸ்தர்களுக்கு எதிரான ஈஸ்டர் குண்டத் தாக்குதல் வழக்கின் தீர்ப்பு இன்று   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • போதிலும் அதனைத் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளாதமை மூலம், தமது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டதாக குற்றம் சுமத்தி, உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் மீதான தீர்ப்பு இன்று அறிவிக்கப்படவுள்ளது.
  • முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உள்ளிட்டோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள குறித்த அடிப்படை உரிமை மனுக்கள் மீதான தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட உள்ளதாக, கடந்த 5ஆம் திகதி உயர்நீதிமன்றம் அறிவித்திருந்தது.
  • ஏப்ரல் 21ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாத குண்டுத் தாக்குதல்களில், 269 பேர் கொல்லப்பட்டதுடன், 500 இற்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
  • குறித்த குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட மேலும் சில தரப்பினரால் 12 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
எழுத்து அளவு:

போதிலும் அதனைத் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளாதமை மூலம், தமது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டதாக குற்றம் சுமத்தி, உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் மீதான தீர்ப்பு இன்று அறிவிக்கப்படவுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உள்ளிட்டோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள குறித்த அடிப்படை உரிமை மனுக்கள் மீதான தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட உள்ளதாக, கடந்த 5ஆம் திகதி உயர்நீதிமன்றம் அறிவித்திருந்தது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவர்கொண்ட நீதியரசர்கள் ஆயத்தால் இந்தத் தீர்ப்பு அறிவிக்கப்படவுள்ளது.

2019 ஏப்ரல் 21ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாத குண்டுத் தாக்குதல்களில், 269 பேர் கொல்லப்பட்டதுடன், 500 இற்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

குறித்த குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட மேலும் சில தரப்பினரால் 12 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அந்த மனுக்களின் பிரதிவாதிகளாக, முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, முன்னாள் காவல்துறைமா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ உள்ளிட்டோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...