Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

“புலிகள் அமைப்பைப் போன்றே கூட்டமைப்பையும் ரணில் பிளவுபடுத்திவிட்டார்”

T

The Leader Desk

ஜனவரி 12, 2023 • 3:49 AM

“புலிகள் அமைப்பைப் போன்றே கூட்டமைப்பையும் ரணில் பிளவுபடுத்திவிட்டார்”   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தமிழ் தேசிய கூட்டமைப்பையும் பிரித்துள்ளதாக கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையிலான தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் உப தலைவர் ஜெயா சரவணன் தெரிவித்துள்ளார்.
  • அழைப்புக்கள் தலைமைக்கு வந்த வண்ணம் தான் உள்ளது.
  • வருட பிரச்சினையை 4 ஆம் திகதிக்குள் தீர்வு தருவதாக அறிவித்துவிட்டார்.
எழுத்து அளவு:

தமிழ் தேசிய கூட்டமைப்பையும் பிரித்துள்ளதாக கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையிலான தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் உப தலைவர் ஜெயா சரவணன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைக் கூறிய அவர், நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியும் போட்டியிடவுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் கருத்து வெளியிட்ட அவர், “ தற்போது தமிழ் கட்சிகள் பிரிந்துவிட்டால் எங்களுடைய வாழ்க்கை இழந்து போய்விட்டதாக பேசுகின்றார்கள்.

ஒன்றாக இருந்து தங்கள் தங்களுடைய குடும்பங்களையும், சொந்த பந்தங்களையும் வளர்த்ததைத் தவிர தமிழ் மக்களுக்கோ தமிழர்களுடைய பிரச்சினைகளுக்கோ என்ன நடைபெற்றுள்ளது.

மாவீரர்தினம் வந்ததும் மண்வெட்டியை தூக்கி வைத்துக்கொண்டு வெளிநாடுகளிலிருந்து பணம் பெற்றுக்கொள்வதைத் தவிர வேறு என்னத்தை செய்தார்கள், இனியும் ஒன்றும் நடைபெறப்போவதில்லை. பிரிந்து செல்வது நல்லது. பிரிவதால் எமக்கு ஒரு கவலையும் இல்லை.

ஏனைய கட்சிகள் எங்களுக்கு அழைப்பு விட முடியாது. ஏனென்றால் நாங்கள் தனித்துவமாக போய் கொண்டு இருக்கின்றோம். அழைப்புக்கள் தலைமைக்கு வந்த வண்ணம் தான் உள்ளது.

ஆனால் எங்களுடன் இணைந்து செயற்பட விரும்பினால் லஞ்சம், ஊழல் தவிர்த்து வேலை செய்ய விரும்பினால் யாராக வேண்டுமானாலும் இணைந்து கொள்ளலாம்.

அதிபர் ரணில் விக்ரமசிங்க தந்திரம் மிக்கவுள்ள ஒருவர். 70 வருட பிரச்சினையை 4 ஆம் திகதிக்குள் தீர்வு தருவதாக அறிவித்துவிட்டார்.

பின்னர் தமிழ் கட்சிகள் அனைத்தும் சேர்ந்திருந்தால் தான் தீர்வை கொடுக்க முடியும் என்பதை அறிவிப்பார். அதற்காக தான் தமிழ் கட்சிகள் உடைக்கப்பட்டுள்ளது. முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை உடைத்தார். இப்போது கூட்டமைப்பை உடைத்தார் அவ்வளவே” என்றார்.  

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...