Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நிறுத்தப்படுகிறதா?

T

The Leader Desk

ஜனவரி 10, 2023 • 3:04 PM

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நிறுத்தப்படுகிறதா?

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • உத்தரவிட அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
  • இன்று (10) பிற்பகல் கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ விடுத்துள்ள விசேட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
  • இது மக்களின் ஜனநாயக உரிமைகளை முழுமையாக மீறுவதுடன் மக்களின் இறையாண்மைக்கு எதிரானது எனத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இது மாளிகைச் சதிகளின் விளைவு எனவும் தெரிவித்தார்.
எழுத்து அளவு:

உத்தரவிட அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

இன்று (10) பிற்பகல் கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ விடுத்துள்ள விசேட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் கோரப்பட்டுள்ளதுடன், தேர்தல் அதிகாரிகள் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்கும் பணியை முன்னெடுத்துள்ள நிலையில், மறு அறிவித்தல் வரும் வரை தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்பதை நிறுத்துமாறு அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் உத்தரவிட அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

இது மக்களின் ஜனநாயக உரிமைகளை முழுமையாக மீறுவதுடன் மக்களின் இறையாண்மைக்கு எதிரானது எனத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இது மாளிகைச் சதிகளின் விளைவு எனவும் தெரிவித்தார்.

தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர், தேர்தலை நடத்துவதற்குத் தேவையான நடைமுறைகளைப் பேணுவது தேர்தல்கள் ஆணைக்குழுவின் பொறுப்பாகும் எனத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், அமைச்சரவை எடுத்த தீர்மானம் அரசியலமைப்பை மீறும் சட்ட விரோதமான தீர்மானமாகும் எனவும் தெரிவித்தார்.

மக்களின் இறையாண்மை மற்றும் ஜனநாயகத்தை மீறும் வகையில் அரசாங்கம் மேற்கொள்ளும் இந்த தன்னிச்சையான செயற்பாட்டிற்கு எதிராக நாட்டு மக்களுடன் முன் நிற்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயார் எனவும் அவர் தெரிவித்தார்.

letter1.jpg

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...