Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

இலங்கை - இந்தியாவுக்கு இடையில் மின்சார பரிமாற்ற இணைப்பு?

T

The Leader Desk

ஜனவரி 10, 2023 • 2:52 PM

இலங்கை - இந்தியாவுக்கு இடையில் மின்சார பரிமாற்ற இணைப்பு?   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ' இருதரப்பு பேச்சுவார்த்தைகளுக்கு திட்டமிடுவதாக இந்திய செய்தித்தளம் ஒன்று கூறியுள்ளது.
  • இலங்கையில் உள்ள தனது உயர்ஸ்தானிகரத்தின் மூலம் இந்திய அரசாங்கம் தனது முயற்சிகளைத் தொடர்கிறது.
  • இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான 'பவர் கிரிட் கோர்ப்பரேஷன் ஒஃப் இந்தியா' ஏற்கனவே முன்மொழியப்பட்ட திட்டத்திற்கான பூர்வாங்க அறிக்கையை தயாரித்துள்ளது.
எழுத்து அளவு:

' இருதரப்பு பேச்சுவார்த்தைகளுக்கு திட்டமிடுவதாக இந்திய செய்தித்தளம் ஒன்று கூறியுள்ளது.

இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான 'பவர் கிரிட் கோர்ப்பரேஷன் ஒஃப் இந்தியா' ஏற்கனவே முன்மொழியப்பட்ட திட்டத்திற்கான பூர்வாங்க அறிக்கையை தயாரித்துள்ளது.

கடந்த ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் பின்னணியில், மின்சார பற்றாக்குறையை முடங்கியதன் பின்னணியில் ஆரம்பப் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.

இலங்கையில் உள்ள தனது உயர்ஸ்தானிகரத்தின் மூலம் இந்திய அரசாங்கம் தனது முயற்சிகளைத் தொடர்கிறது.

இலங்கையின் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சும் இந்திய உயர்ஸ்தானிகரகத்துடன் தொடர்பில் உள்ளது.

இந்தநிலையில் தற்போது உயர் அரசியல் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்று இரு தரப்பினரும் கருதுவதாக இந்திய செய்தித்தளம் கூறுகிறது.

எனினும் இது தொடர்பில் இந்திய மத்திய மின்சார அமைச்சகம், வெளியுறவு அமைச்சகம், புது டில்லியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகரகம் மற்றும் பவர் கிரிட் நிறுவனம் ஆகியவற்றின் கருத்துக்கள் எவையும் இதுவரை வெளியாகவில்லை.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...