Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

மொட்டுடன் யானை கூட்டணி

T

The Leader Desk

ஜனவரி 10, 2023 • 12:43 PM

மொட்டுடன் யானை கூட்டணி   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஐக்கிய தேசிய கட்சியும் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுமே இந்த தீர்மானத்தினை எடுத்துள்ளன.
  • இரண்டு கட்சிகளின் கூட்டணிக்கான பொது சின்னம் என்னவென்பது தொடர்பிலான பொது இணக்கப்பாடு இதுவரை எட்டப்படவில்லை எனவும் குறிப்பிடப்படுகின்றது.
  • திருகோமலை மாவட்டத்தில் 13 உள்ளூராட்சி மன்றக்களுக்கான கட்டுப்பணத்தை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் உட்பட மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கபில அத்துக்கோரல ஆகியோரின் பங்கேற்றது டன் கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.
எழுத்து அளவு:

ஐக்கிய தேசிய கட்சியும் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுமே இந்த தீர்மானத்தினை எடுத்துள்ளன.

இரு தரப்பு பிரதிநிதிகளுக்கும் இடையில் கொழும்பில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சில சபைகளுக்கு யானை சின்னத்திலும், சில சபைகளுக்கு மொட்டு சின்னத்திலும் ஏனைய பகுதிகளில் பொது சின்னத்தின் கீழும் போட்டியிடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஐந்து மாவட்டங்கள் தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் இன்றைய தினம் நடத்தப்பட்டதாகவும், ஏனைய மாவட்டங்கள் தொடர்பிலான பேச்சுவார்த்தை எதிர்வரும் காலத்தில் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இரண்டு கட்சிகளின் கூட்டணிக்கான பொது சின்னம் என்னவென்பது தொடர்பிலான பொது இணக்கப்பாடு இதுவரை எட்டப்படவில்லை எனவும் குறிப்பிடப்படுகின்றது.

ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்கள் அதிகமாக இருக்கும் பகுதிகளில் மொட்டு கட்சியுடன் இணைந்து போட்டியிடுவது குறித்து ஆராய்ந்து வருவதாகவும் இதற்கான தீர்வு விரைவில் அறிவிக்கப்படும் எனவும் பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் திருகோணமலை மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) தமது கட்டுப்பணத்தை செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

திருகோமலை மாவட்டத்தில் 13 உள்ளூராட்சி மன்றக்களுக்கான கட்டுப்பணத்தை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் உட்பட மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கபில அத்துக்கோரல ஆகியோரின் பங்கேற்றது டன் கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...