Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

'கூட்டமைப்பின் முன்மொழிவுகள் அடுத்த பேச்சில் சாதகமாகப் பரிசீலனை'

T

The Leader Desk

ஜனவரி 7, 2023 • 2:25 PM

'கூட்டமைப்பின் முன்மொழிவுகள் அடுத்த பேச்சில் சாதகமாகப் பரிசீலனை'   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சர்வகட்சிக் கூட்டத்தில் சாதகமாகப் பரிசீலிக்கப்படும்.
  • இதன் தொடர்ச்சியாக அடுத்த சர்வகட்சிப் பேச்சு எதிர்வரும் 10, 11, 12ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளன.
  • சர்வகட்சிப் பேச்சு சரியான திசையை நோக்கியே சென்றுகொண்டிருக்கின்றது" என்று பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.
எழுத்து அளவு:

சர்வகட்சிக் கூட்டத்தில் சாதகமாகப் பரிசீலிக்கப்படும். சர்வகட்சிப் பேச்சு சரியான திசையை நோக்கியே சென்றுகொண்டிருக்கின்றது" என்று பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.

இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகள் தொடர்பில் இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அதிருப்தியை வெளியிட்டுள்ளமை தொடர்பில் ஊடகங்களிடம் பிரதமர் கருத்துரைக்கும் போதே இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

"சர்வகட்சிக் கூட்டம் கடந்த மாதம் நடைபெற்றது. அந்த முதலாவது அமர்வில் தமிழ் மக்களுக்குத் தீர்வொன்றை வழங்க வேண்டும் என்பதில் அனைத்துக் கட்சித் தலைவர்களும் உடன்பட்டுள்ளனர். இதன் தொடர்ச்சியாக அடுத்த சர்வகட்சிப் பேச்சு எதிர்வரும் 10, 11, 12ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளன.

இந்த இரண்டாம்கட்டப் பேச்சுக்கு முன்னர் ஒரு முன்னேற்பாடாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் ஜனாதிபதி பேச்சு நடத்தியுள்ளார். உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் தொடர்பிலும் இதர விடயங்கள் தொடர்பிலும் அவர்களிடம் முன்மொழிவுகள் கோரப்பட்டுள்ளன.

இந்த முன்மொழிவுகளுக்கு அமைய அடுத்த சர்வகட்சிக் கூட்டத்தில் கலந்துரையாடல்கள் இடம்பெறும். அதன்போது கூட்டமைப்பினரின் முன்மொழிவுகள் சாதகமாகப் பரிசீலிக்கப்படும். ஆதலால், கூட்டமைப்பினரின் தற்போதைய அதிருப்தி நிலையை ஏற்க முடியாது. ஏனெனில், சர்வகட்சிக் கூட்டமானது அதன் சரியான திசையை நோக்கியே சென்று கொண்டிருக்கின்றது" – என்றார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...