Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

இனப்பிரச்சினை பேச்சுக்களின் பின்னணியில் இந்திய நகர்வு

T

The Leader Desk

ஜனவரி 7, 2023 • 3:55 AM

இனப்பிரச்சினை பேச்சுக்களின் பின்னணியில் இந்திய நகர்வு   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நிலையில், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.
  • எனினும் இந்த உத்தியோகபூர்வ விஜயத்துக்கான இறுதி திகதி இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
  • இதேவேளை, இலங்கையின் நெருக்கடியான காலகட்டத்தில், இந்தியா பல உதவிகளை செய்திருந்ததுடன் 4 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான நிதி உதவியையும் வழங்கியிருந்ததாக இலங்கை அரசாங்க தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

நிலையில், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எதிர்வரும் மாதம் சுதந்திர தினத்திற்கு முன்னதாக இனப்பிரச்சினைக்கு தீர்வு வழங்குதாக ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ள பின்னணியில், அவரது பயணம் இந்த மாதமே இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இருதரப்பு பேச்சுக்களுக்காக இந்த மாதம் இந்திய வெளிவவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் இந்த உத்தியோகபூர்வ விஜயத்துக்கான இறுதி திகதி இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இறுதியாக கடந்த வருடம் மார்ச் மாதம், கோட்டாபய ராஜபக்ச அதிபராக பதவி வகித்த போது இலங்கைக்கு விஜயம் செய்திருந்த நிலையில், அதிபராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றதன் பின்னர் மேற்கொள்ளும் முதல் விஜயம் இதுவாகும்.

அத்துடன், புது வருடத்தில் இலங்கை வரும் முதல் உயர்மட்ட வருகையாக இது கருதப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கையின் நெருக்கடியான காலகட்டத்தில், இந்தியா பல உதவிகளை செய்திருந்ததுடன் 4 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான நிதி உதவியையும் வழங்கியிருந்ததாக இலங்கை அரசாங்க தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

இனப்பிரச்சினை பேச்சுக்களின் பின்னணியில் இந்திய நகர்வு | Tamil Leader | We Lead the Nation