Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

மஹிந்தவின் கோரிக்கை நிராகரிப்பு; இலங்கை வங்கிக்கு ரொனால்ட் பெரேரா

T

The Leader Desk

ஜனவரி 5, 2023 • 3:18 PM

மஹிந்தவின் கோரிக்கை நிராகரிப்பு; இலங்கை வங்கிக்கு ரொனால்ட் பெரேரா

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இவர் இதற்கு இவர் இலங்கை வங்கியின் தலைவராக நான்கரை வருடங்கள் பதவி வகித்தவராவார்.
  • மக்கள் வங்கியின் தலைவர் சுஜீவ ராஜபக்ஷவின் பதவிக்காலமும் நிறைவடைந்த நிலையில், அவருக்கு பதவி நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.
  • இலங்கை வங்கியின் தலைவராக இருந்த காஞ்சன ரத்வத்தவின் பதவிக்காலம் நிறைவடைந்துள்ளது.
எழுத்து அளவு:

 

இவர் இதற்கு இவர் இலங்கை வங்கியின் தலைவராக நான்கரை வருடங்கள் பதவி வகித்தவராவார்.

இலங்கை வங்கியின் தலைவராக இருந்த காஞ்சன ரத்வத்தவின் பதவிக்காலம் நிறைவடைந்துள்ளது. அதன் பிரகாரம், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட தாமரை மொட்டுக் கட்சியின் பலம் வாய்ந்தவர்கள், காஞ்சனவின் சேவைக் காலத்தை  நீடிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சேவை நீடிப்பு தொடர்பான கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அறிவித்திருந்த போதிலும் இன்று பிற்பகல் குறித்த பதவிக்கு ரொனால்ட் பெரேரா நியமிக்கப்பட்டுள்ளமை மொட்டுக் கட்சியின் முக்கியஸ்தர்களைக் கவலையடையச் செய்துள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மக்கள் வங்கியின் தலைவர் சுஜீவ ராஜபக்ஷவின் பதவிக்காலமும் நிறைவடைந்த நிலையில், அவருக்கு பதவி நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.

ரொனால்ட் பெரேரா, கடந்த ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தில் நீதி, காணி மற்றும் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சராக பதவி வகித்த மறைந்த ஜனாதிபதியின் சட்டத்தரணி போல் பெரேரா மற்றும் மேல் மாகாண சபையின் முன்னாள் தவிசாளராக இருந்த குலசீலி பெரேரா ஆகியோரின் புதல்வராவார்.

ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு உறுப்பினரான ரொனால்ட் பெரேரா, தேசிய லொத்தர் சபை மற்றும் தேசிய காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் தலைவராக தற்போது பதவி வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...