Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

வரி அதிகரிப்பால் வடக்கில் வைத்திய சிகிச்சைக்கு இடையூறு

T

The Leader Desk

ஜனவரி 5, 2023 • 2:50 PM

வரி அதிகரிப்பால் வடக்கில் வைத்திய சிகிச்சைக்கு இடையூறு

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • வசதிகளையும் இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வைத்திய சங்கம் ஒன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
  • வேலணை வைத்தியசாலையில் ஒரு வைத்தியர் மாத்திரமே கடமையாற்றுவதுடன் அவரும் வெளியேறத் தயாராகி வருவதால் வைத்தியசாலை மூடப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதோடு, நெடுந்தீவு வைத்தியசாலையிலும் ஒரு வைத்தியரே கடமையாற்றுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
  • ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் புதிய வருமான வரியானது, வைத்தியர்களுக்கும் பல்வேறு தொழில்துறைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக யாழ்.
எழுத்து அளவு:

வசதிகளையும் இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வைத்திய சங்கம் ஒன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

2023ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் புதிய வருமான வரியானது, வைத்தியர்களுக்கும் பல்வேறு தொழில்துறைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக யாழ். தீவகப் பகுதி வைத்தியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

யாழ்ப்பாணத் தீவுகளில் அமைந்துள்ள வைத்தியசாலைகளுக்கு பணிக்குச் செல்லும் வைத்தியர்கள் போக்குவரத்திற்கு பெருமளவு பணத்தை செலவிடவேண்டியுள்ளதால், அந்த வைத்தியசாலைகளில் பணியாற்றுவதற்கு வைத்தியர்கள் மிகவும் தயக்கம் காட்டுவதாக யாழ். தீவகப் பகுதி வைத்தியசாலைகளின் வைத்தியர் சங்கத்தின் செயலாளர் எஸ். நிஷாந்தன் கூறியுள்ளார்.

டிசம்பர் 9, 2022 அன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட உள்நாட்டு வருமான வரி (திருத்த) சட்டத்திற்கு அமைய, மாதத்திற்கு ஒரு இலட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டும் தனிநபர்களின் வருமானத்திற்கு வரி விதிக்கப்படுவதோடு, ஒரு இலட்ச ரூபாய் வரை மாத வருமானம் பெறுபவர்களுக்கு வரி விதிப்பில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக ஏற்கனவே பல வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறி வருவதாக சுட்டிக்காட்டிய வைத்தியர் எஸ்.நிஷாந்தன், யாழ்ப்பாணத் தீவுகளில் அமைந்துள்ள வைத்தியசாலைகளில் வைத்தியர்களுக்கு கடுமையான பற்றாக்குறைக்கு நிலவுவதாகவும், அந்தத் தீவுகளுக்குச் செல்வதற்கு வைத்தியர்கள் அதிக போக்குவரத்துச் செலவுகளைச் சுமக்க வேண்டியிருப்பதே இதற்கு காரணம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

புங்குடுதீவு, வேலணை, ஊர்காவத்துறை, காரைநகர், எழுவைதீவு, நயினாதீவு, நெடுந்தீவு போன்ற தீவுகளில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளும் வைத்தியர் பற்றாக்குறையை எதிர்நோக்குவதாகவும் இதனால் அந்த வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறும் நோயாளர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்வதாகவும் வைத்தியர் சுட்டிக்காட்டினார்.

காரைநகர் வைத்தியசாலையில் இருந்து வைத்தியர் ஒருவர் விலகியுள்ளதாகவும், அனலைத்தீவு வைத்தியசாலைக்கு நியமிக்கப்பட்ட வைத்தியர் ஒருவர் அங்கு பணிக்கு சமூகமளிக்காமலேயே விலகியுள்ளதாகவும் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்தியர் நிஷாந்தன் வெளிப்படுத்தியுள்ளார்.

வேலணை வைத்தியசாலையில் ஒரு வைத்தியர் மாத்திரமே கடமையாற்றுவதுடன் அவரும் வெளியேறத் தயாராகி வருவதால் வைத்தியசாலை மூடப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதோடு, நெடுந்தீவு வைத்தியசாலையிலும் ஒரு வைத்தியரே கடமையாற்றுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தீவுகளில் பயணச் செலவுகளுக்கு மேலதிகமாக, உணவுப் பொருட்களின் விலையும் மிக அதிகமாக உள்ளதாக  ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்த வைத்திய சங்கத்தின் செயலாளர், தீவுகளில் உள்ள வைத்தியர்களுக்கு உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைப்பதில்லை எனவும் கூறியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் விரைவான தீர்வை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்தியர் நிஷாந்தன் கோரியுள்ளார்.

யாழ். தீவக மக்களின் வாக்குகளால் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள டக்ளஸ் தேவானந்தா தற்போதைய அரசாங்கத்தின் மீன்பிடி அமைச்சராக உள்ளார்.

தனியார் சேவைகளை வழங்கும் வைத்தியர்கள் உட்பட தனியார் சேவை வழங்குனர்களும் புதிய வரி திருத்தத்தின் கீழ் உள்ளடக்கப்பட்டுள்ளதாக, நுகர்வோர் சேவைகள் பிரதி ஆணையாளர் எஸ். எஸ். டி. வீரசேகர கூறியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

வரி அதிகரிப்பால் வடக்கில் வைத்திய சிகிச்சைக்கு இடையூறு | Tamil Leader | We Lead the Nation