Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

உலகில் முதன்மையான காடுகளை அழிக்கும் நாடுகளில் இலங்கை

T

The Leader Desk

ஜனவரி 5, 2023 • 4:08 AM

உலகில் முதன்மையான காடுகளை அழிக்கும் நாடுகளில் இலங்கை   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அத்துடன் 2022ஆம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் 5ஆம் திகதி வரை இறந்த யானைகளின் எண்ணிக்கை 395 என சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை ஆய்வுகள் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
  • ஆம் ஆண்டிலேயே இலங்கையில் பெரிய சுற்றுச்சூழல் அழிவு ஏற்பட்டது, ஒரு நாளைக்கு 65 ஏக்கர் காடுகள் அழிக்கப்பட்டன.
  • ஆம் ஆண்டு முதல் நாட்டில் 5.3 வீத முதன்மை காடுகள் அழிக்கப்பட்டுள்ளன.
  • பொலன்னறுவை மாவட்டத்தில் உள்ள திருகோணமடு வனப் பகுதியில் 1,500 ஏக்கர் காடுகள் அழிக்கப்பட்டன.
எழுத்து அளவு:

அத்துடன் 2022ஆம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் 5ஆம் திகதி வரை இறந்த யானைகளின் எண்ணிக்கை 395 என சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை ஆய்வுகள் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் உலகில் முதன்மையான காடுகளை அழிக்கும் நாடுகளில் இலங்கை நான்காவது இடத்தில் உள்ளதாக உலக உணவு மற்றும் விவசாய அமைப்பு பல தடவைகள் குறிப்பிட்டுள்ளதாக மத்திய நிலையத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் ரவீந்திர காரியவசம் தெரிவித்துள்ளார்.

2021ஆம் ஆண்டிலேயே இலங்கையில் பெரிய சுற்றுச்சூழல் அழிவு ஏற்பட்டது, ஒரு நாளைக்கு 65 ஏக்கர் காடுகள் அழிக்கப்பட்டன. 2002ஆம் ஆண்டு முதல் நாட்டில் 5.3 வீத முதன்மை காடுகள் அழிக்கப்பட்டுள்ளன.

பொலன்னறுவை மாவட்டத்தில் உள்ள திருகோணமடு வனப் பகுதியில் 1,500 ஏக்கர் காடுகள் அழிக்கப்பட்டன. வத்தேகம கெபிலித்த வனப் பகுதியின் 12,500 ஏக்கர் நிலப்பரப்பை சேனைப் பயிர்ச்செய்கையாளர்களுக்கு பகிர்ந்தளிக்கும் முயற்சியில் சமனல பகுதியில் வனப் பகுதி, சிங்கராஜா மற்றும் கல் ஓயா தேசிய வனப் பகுதிகளும் அழிக்கப்பட்டன.

இதற்கிடையில் 2021ஆம் ஆண்டே, இலங்கையின் யானைகள் கடுமையான அச்சுறுத்தலை எதிர்கொண்ட ஆண்டாக கருதப்படுகிறது.

2022 ஜனவரி முதல் டிசம்பர் 5 வரை இலங்கையில் இறந்த யானைகளின் எண்ணிக்கை எண்ணிக்கை 395 ஆகும். அத்துடன் யானைகள் தாக்கியதில் 127 பேர் உயிரிழந்துள்ளனர்.

2021 ஆம் ஆண்டை விட அதிகமாக 20 யானைகள் 2021இல் இறந்துள்ளன. இதன்படி தற்போது இலங்கையில் தினமும் ஒரு யானை இறக்கிறது. கடந்த 50 ஆண்டுகளில் யானைகளின் வாழ்விடங்கள் 15வீதத்தினால் சுருங்கிவிட்டன.

அத்துடன் யானை வழித்தடங்கள், விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகள் மாற்றப்பட்டதால் மனித-யானை மோதல் அதிகரித்துள்ளது என்றும் சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை ஆய்வுகள் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...