Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

தமிழர் பிரச்சினைகள் குறித்து சம்பந்தன் - மஹிந்த பேச்சு

T

The Leader Desk

ஜனவரி 4, 2023 • 2:47 PM

தமிழர் பிரச்சினைகள் குறித்து சம்பந்தன் - மஹிந்த பேச்சு   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • காண நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
  • இந்த விஜயத்தின் போது, வடக்கு, கிழக்கு தமிழர்களின் பிரச்சினைகள் மற்றும் தமிழ்த் தேசிய பிரச்சினைகள் தொடர்பில் இரா.சம்பந்தன், மஹிந்த ராஜபக்ஷவுக்கு எடுத்துரைத்துள்ளார்.
  • முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையில் இன்று (04) கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.
எழுத்து அளவு:

காண நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையில் இன்று (04) கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

இரா.சம்பந்தனின் உடல் நலம் தொடர்பில் ஆராய்வதற்காக, அவரது வீட்டுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று விஜயம் செய்துள்ளார். இதன்போதே, இரா.சம்பந்தன் இந்த கோரிக்கையை விடுத்ததாக முன்னாள் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

இந்த விஜயத்தின் போது, வடக்கு, கிழக்கு தமிழர்களின் பிரச்சினைகள் மற்றும் தமிழ்த் தேசிய பிரச்சினைகள் தொடர்பில் இரா.சம்பந்தன், மஹிந்த ராஜபக்ஷவுக்கு எடுத்துரைத்துள்ளார்.

தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்கு அரசாங்கம் விரைவில் தீர்வு காண வேண்டும் எனவும் மஹிந்தவிடம் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

வடக்கு மற்றும் கிழக்கு தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினை தொடர்பில் தான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடல்களை நடத்தி, சுமுகமான தீர்வை பெற்றுக்கொடுக்க முயற்சிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த, இரா.சம்பந்தனிடம் உறுதியளித்துள்ளார்.

தமிழர் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடல்களை நடத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மூன்று நாள் சர்வகட்சி மாநாட்டில், தமது கட்சியின் பிரதிநிதிகளும் கலந்துக்கொள்வார்கள் என மஹிந்த இதன்போது கூறியுள்ளார்.

அதன்பின்னர், இந்த கலந்துரையாடல்களில் முன்வைக்கப்படும் முன்மொழிவுகள் தொடர்பில் ஆராய்வதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

WhatsApp_Image_2023-01-04_at_6.13.37_PM.jpeg

 

WhatsApp_Image_2023-01-04_at_6.13.34_PM.jpegWhatsApp_Image_2023-01-04_at_6.13.35_PM.jpeg

WhatsApp_Image_2023-01-04_at_6.13.36_PM.jpeg

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...