Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

மாற்றத்திற்காக போராடியவர்களை தேர்தலுக்கு தயாராகுமாறு அழைப்பு

T

The Leader Desk

ஜனவரி 4, 2023 • 6:57 AM

மாற்றத்திற்காக போராடியவர்களை தேர்தலுக்கு தயாராகுமாறு அழைப்பு   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளார்.
  • அரசாங்கத்தில் இருக்கும் ஒரு சிலர் நிதி இல்லை என சொல்லும் நொண்டி சாட்டுகள் தொடர்பில் கரிசனை செலுத்தாமல், அனைவரும் தேர்தலுக்கு தயாராக வேண்டும்.
  • உள்ளூராட்சி நிறுவனங்களின் வட்டார எல்லை நிர்ணயத்தை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தலைமையிலான தேசிய எல்லை நிர்ணய குழுவினை இன்று(புதன்கிழமை) சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார்.
எழுத்து அளவு:

நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளார்.

உள்ளூராட்சி நிறுவனங்களின் வட்டார எல்லை நிர்ணயத்தை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தலைமையிலான தேசிய எல்லை நிர்ணய குழுவினை இன்று(புதன்கிழமை) சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார்.

அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் இவ்வாறு பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “மாற்றத்தினை கோரி போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு தற்போது ஜனநாயக நீதியாக ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.

இவ்வாறு அவர்களுக்கு கிடைத்துள்ள வாய்ப்பினை அவர்கள் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். எனவே அவர்கள் அனைவரும் ஆர்வமாக இந்த தேர்தலுக்கு தயாராக வேண்டும்.

அரசாங்கத்தில் இருக்கும் ஒரு சிலர் நிதி இல்லை என சொல்லும் நொண்டி சாட்டுகள் தொடர்பில் கரிசனை செலுத்தாமல், அனைவரும் தேர்தலுக்கு தயாராக வேண்டும்.

அதேபோன்று உள்ளூராட்சி நிறுவனங்களின் வட்டார எல்லை நிர்ணயத்தை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரியவிடம் மேலும் பல விடயங்கள் தொடர்பில் நாம் பேசியிருந்தோம்.

குறிப்பாக வட்டாரங்களின் எண்ணிக்கையினைக் குறைக்கும் வகையிலான சில செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. இதற்கு ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் துணை போகும் வகையில் செயற்படுகின்றனர்.

எனினும், மட்டக்களப்பு மாவட்டத்தினை பொறுத்தவரையில் வட்டாரங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டுமே ஒழிய குறைக்கப்பட்டக் கூடாது.

இந்த விடயத்தினை நாம் இன்றைய தினம் வலியுறுத்தியுள்ளோம்.“ என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

மாற்றத்திற்காக போராடியவர்களை தேர்தலுக்கு தயாராகுமாறு அழைப்பு | Tamil Leader | We Lead the Nation