Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

மிக விரைவில் அமைச்சரவை மறுசீரமைப்பு

T

The Leader Desk

ஜனவரி 2, 2023 • 6:34 AM

மிக விரைவில் அமைச்சரவை மறுசீரமைப்பு

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இம்மாத இறுதிக்குள் நிறைவுப்படுத்த அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.
  • தற்போதைய அமைச்சுக்களை காட்டிலும் மேலதிகமாக 12 அமைச்சுக்களை நியமிக்க அவதானம் செலுத்த்ப்பட்டுள்ளது.
  • ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்களக்கு புதிய அமைச்சரவையில் முக்கிய அமைச்சு பதவிகள் வழங்கப்படவுள்ளன.
  • அத்துடன் 6 ஆளுநர்களை புதிதாக நியமிக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

இம்மாத இறுதிக்குள் நிறைவுப்படுத்த அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.

ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் இணக்கப்பாட்டுக்கு அமைய அமைச்சரவையை மறுசீரமைக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக ஆளும் தரப்பின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டார்.

தற்போதைய அமைச்சுக்களை காட்டிலும் மேலதிகமாக 12 அமைச்சுக்களை நியமிக்க அவதானம் செலுத்த்ப்பட்டுள்ளது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்களக்கு புதிய அமைச்சரவையில் முக்கிய அமைச்சு பதவிகள் வழங்கப்படவுள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன,பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயல்படும் அரசியல் தரப்பினருக்கும் அமைச்சு பதவிகள் வழங்கப்படவுள்ளன.

அத்துடன் 6 ஆளுநர்களை புதிதாக நியமிக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. மத்திய மாகாணம்,மேல் மாகாணம், சப்ரகமுவ ஆகிய மாகாணங்களுக்கு ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களை ஆளுநர்களாக நியமிக்கவும், தெற்கு, வடமேல் மற்றும் கிழக்கு ஆகிய மாகாணங்குக்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களை ஆளுநர்களாக நியமிக்கவும் ஆளும் தரப்பிற்குள் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

விளையாட்டு, நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி, போக்குவரத்து,வனஜீவராசிகள் பாதுகாப்பு, சுகாதாரம், துறைமுகம், கைத்தொழில், மின்சாரம் மற்றும் சுற்றாடல் ஆகிய அமைச்சுக்களை மறுசீரமைக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...