Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

வீட்டைப் பலப்படுத்துமாறு சம்பந்தனுக்கு அட்வைஸ்

T

The Leader Desk

ஜனவரி 2, 2023 • 6:25 AM

வீட்டைப் பலப்படுத்துமாறு சம்பந்தனுக்கு அட்வைஸ்   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்துக்கு முன்னதாக இந்தக் கடிதம் அனுப்பி வைக்கப்படும் என்று நம்பகரமாகத் தெரியவருகின்றது.
  • மேலும், தமிழ்த் தேசியப் பரப்பிலுள்ள அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணைத்து ஓரணியாகக் கூட்டமைப்பை விரிவுபடுத்தி பயணிக்க வேண்டும் என்றும், அதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுக்கவேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் வலியுறுத்தப்படவுள்ளது.
  • தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நிர்வாக ரீதியாக வலுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் இந்தக் கடிதத்தில் முன்வைக்கப்பட்டவுள்ளது.
எழுத்து அளவு:

எடுக்கவேண்டும் என்றும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பரந்துபட்ட அமைப்பாக மாற்ற வேண்டும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா ஆகியோருக்கு ரெலோ மற்றும் புளொட் தலைவர்களால் கடிதம் அனுப்பி வைக்கப்படவுள்ளது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்துக்கு முன்னதாக இந்தக் கடிதம் அனுப்பி வைக்கப்படும் என்று நம்பகரமாகத் தெரியவருகின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நிர்வாக ரீதியாக வலுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் இந்தக் கடிதத்தில் முன்வைக்கப்பட்டவுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கான பொதுச் சின்னம் மற்றும் கட்சிப் பதிவு தொடர்பிலும் சுட்டிக்காட்டப்படவுள்ளது.

மேலும், தமிழ்த் தேசியப் பரப்பிலுள்ள அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணைத்து ஓரணியாகக் கூட்டமைப்பை விரிவுபடுத்தி பயணிக்க வேண்டும் என்றும், அதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுக்கவேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் வலியுறுத்தப்படவுள்ளது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பிய கடிதம், ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்பிய கடிதம், ரணில் அரசின் சர்வகட்சிக் கூட்டத்தில் நிலைப்பாடு எடுக்கும் விவகாரம் என அனைத்து விடயங்களிலும் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒற்றுமையாகச் செயற்பட்டுள்ள நிலையில் அதனைத் தொடர்ந்து ஒன்றித்து - ஓரணியாக - ஒரே கூட்டமைப்பாகக் கொண்டு செல்ல வேண்டியதன் தேவைப்பாடு குறித்தும் அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்படவுள்ளது.

மேலும் உருவாக்கப்படும் கூட்டு தனித்துத் தேர்தலுக்காக மாத்திரம் இல்லாமல் தொடர்ந்தும் அது அவ்வாறானச் செயற்பட வேண்டும் என்றும் கடிதத்தில் சுட்டிக்காட்டப்படவுள்ளது எனவும் தெரியவருகின்றது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...