Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

முதன்முறையாக வெளிநாட்டு லீக்கில் வியாஸ்காந்த்

T

The Leader Desk

டிசம்பர் 30, 2022 • 1:01 PM

முதன்முறையாக வெளிநாட்டு லீக்கில் வியாஸ்காந்த்   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பங்களாதேஷில் நடைபெறவுள்ள பங்களாதேஷ் பிரீமியர் லீக்கில் (BPL) விளையாடவுள்ளார்.
  • LPL தொடரில் 8 இன்னிங்ஸ்களில் 13 விக்கெட்டுகளை சாய்த்து ஜப்னா கிங்ஸ் அணி ஹெட்ரிக் கிண்ணம் வெல்வதற்கு உதவியாக இருந்ததுடன், சிறந்த வளர்ந்துவரும் வீரருக்கான விருதையும் வென்றிருந்தார்.
  • BPL தொடரில் விளையாடவுள்ள 13 இலங்கை வீரர்கள்!
  • இந்த வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்த அணிக்கு நன்றியாக உள்ளோம்.
எழுத்து அளவு:

பங்களாதேஷில் நடைபெறவுள்ள பங்களாதேஷ் பிரீமியர் லீக்கில் (BPL) விளையாடவுள்ளார்.

LPL தொடரில் 8 இன்னிங்ஸ்களில் 13 விக்கெட்டுகளை சாய்த்து ஜப்னா கிங்ஸ் அணி ஹெட்ரிக் கிண்ணம் வெல்வதற்கு உதவியாக இருந்ததுடன், சிறந்த வளர்ந்துவரும் வீரருக்கான விருதையும் வென்றிருந்தார்.

BPL தொடரில் விளையாடவுள்ள 13 இலங்கை வீரர்கள்!

இந்தநிலையில் வியாஸ்காந்த் தற்போது BPL தொடரில் செட்டகிராம் செலஞ்சரங்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அவருடைய முகாமையாளர் ஷியாம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் ஷியாம் குறிப்பிடுகையில், இளம் வீரருக்கு இதுவொரு சிறந்த வாய்ப்பு. இந்த வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்த அணிக்கு நன்றியாக உள்ளோம். அங்கு கிடைக்கும் அனுபவம் வியாஸ்காந்திற்கு அதிகமாக உதவும்” என்றார்.

LPL தொடரில் வாய்ப்பினை சரியாக பயன்படுத்திக்கொண்ட வியாஸ்காந்திற்கு வெளிநாட்டு தொடர் ஒன்றில் விளையாட கிடைக்கும் முதல் வாய்ப்பு இதுவாகும். வியாஸ்காந்திற்கு வாய்ப்பு கிடைத்துள்ளபோதும், தொடருக்கு செல்வதற்கான அனுமதி இலங்கை கிரிக்கெட் சபையிடமிருந்து இதுவரை கிடைக்கவில்லை.

செட்டகிராம் செலஞ்சர்ஸ் அணியில் விஜயகாந்த் வியாஸ்காந்த் மாத்திரமின்றி இலங்கை வீரர்களான விஷ்வ பெர்னாண்டோ மற்றும் அஷான் பிரியன்ஜன் ஆகியவர்கள் ஏற்கனவே இடம்பெற்றுள்ளனர். அதுமாத்திரமின்றி வியாஸ்காந்த் உட்பட மொத்தமாக 14 இலங்கை வீரர்கள் BPL தொடரில் விளையாடவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

BPL தொடரில் விளையாடவுள்ள இலங்கை வீரர்கள்

செட்டகிரொம் செலஞ்சர்ஸ் – விஷ்வ பெர்னாண்டோ, அஷான் பிரியன்ஜன், விஜயகாந்த் வியாஸ்காந்த்
டாக்கா டொமினேட்டர்ஸ் – சாமிக்க கருணாரத்ன, டில்ஷான் முனவீர
குல்னா டைட்டன்ஸ் – அவிஷ்க பெர்னாண்டோ, தசுன் ஷானக
ராங்பூர் ரைடர்ஸ் – ஜெப்ரி வெண்டர்சே, பெதும் நிஸ்ஸங்க
சில்ஹெட் ஸ்ரைக்கர்ஸ் – கமிந்து மெண்டிஸ், திசர பெரேரா, தனன்ஜய டி சில்வா
போர்ச்சுன் பரிஷல் – குசல் ஜனித் பெரேரா, சதுரங்க டி சில்வா 

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

முதன்முறையாக வெளிநாட்டு லீக்கில் வியாஸ்காந்த் | Tamil Leader | We Lead the Nation