Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

'இழப்பீடு வேண்டாம், இறப்புச் சான்றிதழும் வேண்டாம்; காணாமல்போனோர் அலுவலகத்தை அகற்றுங்கள்'

T

The Leader Desk

டிசம்பர் 29, 2022 • 4:16 PM

'இழப்பீடு வேண்டாம், இறப்புச் சான்றிதழும் வேண்டாம்; காணாமல்போனோர் அலுவலகத்தை அகற்றுங்கள்'   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மாத்திரம் பேசும் காணாமல் போனோர் அலுவலகத்தை அகற்றுமாறு மன்னாரில் உள்ள உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
  • அதைவிடுத்து இழப்பீடு பற்றி பேச நீதி அமைச்சருக்கு அதிகாரம் இல்லை.
  • இழப்பீடு குறித்து பேசிக்கொண்டு மன்னார் பக்கம் வரவேண்டாம்.” “பிள்ளைகளைக் கண்டுபிடிக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட 148 பெற்றோர்கள் தங்கள் உறவினர்களுக்கு என்ன ஆனது என்று தெரியாமல் உயிரிழந்துள்ளனர்.
எழுத்து அளவு:

மாத்திரம் பேசும் காணாமல் போனோர் அலுவலகத்தை அகற்றுமாறு மன்னாரில் உள்ள உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

2008ஆம் ஆண்டு காணாமல் ஆக்கப்பட்ட தனது 24 வயது மகனைத் தேடிப் போராடி வரும் மன்னார் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கத்தின் தலைவி மானுவல் உதயச்சந்திரா, காணாமல் ஆக்கப்பட்ட தமது அன்புக்குரியவர்களுக்கு நட்டஈடு வழங்கப்படும் என நீதியமைச்சர் கூறுவதை நிறுத்துமாறும், மன்னாரில் இருந்து காணாமல் போனோர் குறித்த அலுவலகத்தை அகற்றுமாறும் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

“காணாமல்போனோர் குறித்த அலுவலகம் எங்கள் பிள்ளைகளுக்கு இழப்பீடு வழங்குவது அல்லது அவர்களுக்கு இறப்பு சான்றிதழ் வழங்குவது பற்றி பேசுகிறது. எங்களுக்கு இழப்பீடு அல்லது இறப்பு சான்றிதழ் தேவையில்லை. இழப்பீட்டுப் பேச்சுவார்த்தையை இப்போதே நிறுத்தி, மன்னாரில் உள்ள காணாமல்போனோர் அலுவலகத்தை அகற்றுங்கள் அல்லது அகற்றுவோம்.”

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வழங்குமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் தொடர் போராட்டம் 2,200 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் நிலையில் நீதியமைச்சரும் காணாமல்போனோர் அலுவலக அதிகாரிகளும் நாடு முழுவதும் சென்று நட்டஈடு வழங்குவது குறித்து பேசி வருவதாக மன்னார் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் சங்கத்தின் தலைவி தெரிவித்துள்ளார்.

“இழப்பீடு அல்ல, அரச படையினரிடம் ஒப்படைக்கப்பட்ட எங்கள் பிள்ளைகளைத் திருப்பித் தருமாறு நீண்ட நாட்களாகக் கேட்டுக் கொண்டிருக்கிறோம். அதைவிடுத்து இழப்பீடு பற்றி பேச நீதி அமைச்சருக்கு அதிகாரம் இல்லை. இழப்பீடு குறித்து பேசிக்கொண்டு மன்னார் பக்கம் வரவேண்டாம்.”

“பிள்ளைகளைக் கண்டுபிடிக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட 148 பெற்றோர்கள் தங்கள் உறவினர்களுக்கு என்ன ஆனது என்று தெரியாமல் உயிரிழந்துள்ளனர். இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளும் விசாரணைகளில் எமக்கு நம்பிக்கை இல்லை. அதனால்தான் சர்வதேச விசாரணையை கோருகிறோம்.”

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...