Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

தீர்வுப் பேச்சுக்கு வாழ்த்து கூற சீனா மறுப்பு

T

The Leader Desk

டிசம்பர் 29, 2022 • 4:24 AM

தீர்வுப் பேச்சுக்கு வாழ்த்து கூற சீனா மறுப்பு   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தேவை கிடையாது” என்று, இலங்கைக்கான சீனாவின் பிரதித் தூதுவரிடம் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பிரமுகர் ஒருவர் எடுத்துரைத்தார்.
  • பிரமுகர்கள் தரப்பில் எடுத்துரைக்கப்பட்டது.
  • இந்திய - குறிப்பாக தமிழக மக்களுக்கும் இலங்கைத் தமிழ் மக்களுக்கும் உள்ள தொப்புள் கொடி உறவைத் தாங்கள் புரிந்துகொள்கின்றார்கள் என்று சீனப் பிரதித் தூதுவர் இதன்போது பதிலளித்தார்.
எழுத்து அளவு:

தேவை கிடையாது” என்று,  இலங்கைக்கான சீனாவின் பிரதித் தூதுவரிடம் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பிரமுகர் ஒருவர் எடுத்துரைத்தார்.

இந்திய - குறிப்பாக தமிழக மக்களுக்கும் இலங்கைத் தமிழ் மக்களுக்கும் உள்ள தொப்புள் கொடி உறவைத் தாங்கள் புரிந்துகொள்கின்றார்கள் என்று சீனப் பிரதித் தூதுவர் இதன்போது பதிலளித்தார்.

யாழ்ப்பாணத்துக்கு நேற்று மாலை வந்த சீனாவின் பிரதித் தூதுவர் தலைமையிலான குழுவினரை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அறுவர் நேற்றிரவு ஒரு விடுதியில் சந்தித்தனர். இதன்போதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது.

இதேநேரம் போரின் போது பாதிக்கப்பட்ட தரப்புடன் அன்றி, பாதிப்பை ஏற்படுத்திய தரப்புடனேயே சீனா நின்றமை வருத்தமளிக்கின்றது என்று யாழ். பிரமுகர்கள் தரப்பில் எடுத்துரைக்கப்பட்டது.

“இறுதிப் போரின்போது சீனா மட்டுமல்ல, இந்தியா, அமெரிக்கா உட்பட பல நாடுகள் இலங்கை அரசுக்கு  உதவியமையும் எமக்குத் தெரியும். ஆனால், மற்ற நாடுகள் தற்போதேனும் தங்களை மாற்றிக் கொண்டாலும் சீனா இன்று வரை அதனை மாற்றவோ அல்லது பாதிப்புற்றோர் தரப்பைப் பரிவுடன் அணுகவோ தயார் இல்லை.

“இதேநேரம் எமக்காகக் குரல் கொடுக்க முடியாது, நாம் அரசுக்கு  அரசு என்கின்ற ரீதியில்தான் செயற்பட முடியும் எனச் சீனா கருதினால், தற்போது இலங்கை அரசுக்கும் தமிழர் தரப்புக்கும் இடையில் ஒரு பேச்சுவார்த்தை ஏற்பாடு இடம்பெறுகின்றது.

“அந்தப் பேச்சுவார்த்தை வெற்றியளிக்க வேண்டும் என்று ஒரு வாழ்த்து அறிக்கையையாவது சீனாவால் வெளியிட முடியுமா?” என்று யாழ். பிரமுகர்களால் கேட்ட போதும் சீன அதிகாரிகள் அதற்கும் மறுத்துவிட்டனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...