Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

'கூட்டமைப்பினர் தமிழர்களின் ஏக பிரதிநிதிகள் அல்ல'

T

The Leader Desk

டிசம்பர் 28, 2022 • 4:31 AM

'கூட்டமைப்பினர் தமிழர்களின் ஏக பிரதிநிதிகள் அல்ல'   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • , கூட்டமைப்பினரது பெயர் பரிந்துரையை எதிர்த்ததாகவும், கூட்டமைப்பினர் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் பிரதிநிதிகளல்லவெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
  • அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டு இரு மாதங்கள் நிறைவுற்றுள்ளது.
  • பெரும்பான் மைவாதத்தை தக்கவைத்துக் கொள்ளவும், சிறுபான்மையினத்தவர்களுக்கு இடமளிக்கக் கூடாதென்பதற்காகவுமே, தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரின் பெயர் பரிந்துரையை, நாம் எதிர்த்ததாக கூறுவது அடிப்படையற்றது.
எழுத்து அளவு:

, கூட்டமைப்பினரது பெயர் பரிந்துரையை எதிர்த்ததாகவும், கூட்டமைப்பினர் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் பிரதிநிதிகளல்லவெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

அரசியலமைப்பு பேரவைக்கான உறுப்பினர் நியமனம் தொடர்பில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டு இரு மாதங்கள் நிறைவுற்றுள்ளது. எனினும், அரசியலமைப்பு பேரவைக்கான உறுப்பினர் நியமனம் இன்னும் இழுபறியிலேயே உள்ளது. உறுப்பினர் நியமனத்தில் அரசியல் கட்சிகளுக்கிடையில் கருத்தொற்றுமை கிடையாது. பெரும்பான் மைவாதத்தை தக்கவைத்துக் கொள்ளவும், சிறுபான்மையினத்தவர்களுக்கு இடமளிக்கக் கூடாதென்பதற்காகவுமே, தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரின் பெயர் பரிந்துரையை, நாம் எதிர்த்ததாக கூறுவது அடிப்படையற்றது.

அரசியலமைப்பு பேரவைக்கு சுயாதீன தரப்பினர் ஒருவரின் பெயரை பரிந்துரைக்க நாங்கள் ஆரம்பத்தில் தீர்மானிக்கவில்லை. 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நாட்டு மக்களுக்கு எவ்வித நிவாரணத்தையும் வழங்க வில்லை எனத் தமிழ் தேசிய கூட் டமைப்பினர் வரவு செலவுத் திட்ட மீதான விவாதத்தில் சுட்டிக்காட்டி, அரசாங்கத்தின் பொறுப்பற்ற செயற்பாடுகளை விமர்சித்தனர்.

75 ஆவது சுதந்திர தினத்துக்கு முன்னர் அரசியல் தீர்வு காண்பதாக அதிபர் குறிப்பிட்டதை தொடர்ந்து, கூட்டமைப்பினர் வரவு செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை தமது நோக்கங்களுக்காக மாத்திரம் செயற்படும் கூட்டைமப்பினரை அரசியலைமப்பு பேரவையின் உறுப் னர்களாக நியமிப்பது சாத்தியமற்றது.

தமிழ் தேசியய கூட்டமைப்பினர் அரசியலமைப்புப் பேரவையூடாக அதிகார பகிர்வை அணுகுவார்கெளன்ற காரணத்தால் அவர்களின் பெயர் பரிந்துரையை நாங்கள் எதிர்த்தோம். இது தமிழ் மக்களுக்கு எதிரான செயற்பாடல்ல, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் பேசும் மக்களுக்கு உண்மையான அபிவிருத்திகளை வழங்க வேண்டுமென நாடாளுமன்றத்தில் தொடர்ந்து வலியுறுத்தியுள்ளோம். அதிகாரப் பகிர்வு அபிவிருத்திக்கான வழியாக அமையாதென்றார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...