Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

இந்தியக் கடனில் தேர்தலுக்கு 'மை' வாங்கிய ஆணைக்குழு

T

The Leader Desk

டிசம்பர் 27, 2022 • 12:43 PM

இந்தியக் கடனில் தேர்தலுக்கு 'மை' வாங்கிய ஆணைக்குழு   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தேவையான விரல் பூச்சு (மை) இறக்குமதி செய்வது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளது.
  • எவ்வாறாயினும், விரல் பூச்சு இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவரும் தற்போதைய எல்லை நிர்ணய குழுவின் தலைவருமான மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
  • முந்தைய ஆண்டுகளில் அவை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டாலும், கடைசியாக 2020 ஆம் ஆண்டு தேர்தலுக்காக குறித்த விரல் பூச்சுகள், உள்ளூர் உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
  • தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து கடந்த அரசாங்க காலத்தில் இலங்கை மக்களுக்கு தேவையான எரிபொருள் இறக்குமதிக்காக இந்தியா 500 மில்லியன் டொலர் கடன் வசதியை வழங்கியது.
எழுத்து அளவு:

தேவையான விரல் பூச்சு (மை) இறக்குமதி செய்வது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளது.

எவ்வாறாயினும், அதற்கு முன்னர் தற்போது ஆணைக்குழு வசம் உள்ள மை காலாவதியாகிவிட்டதா என பரிசோதிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஏற்கனவே அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திடம் அறிக்கை கோரியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல் ஆணைக்குழு தலைவர் நிமல் புஞ்சிஹேவாவிடம், எமது செய்திப் பிரிவு வினவியபோது, தற்போதுள்ள மை கையிருப்பு தேர்தலை நடத்த போதுமானதாக இல்லாததால், கட்டாயமாக இறக்குமதி செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

எவ்வாறாயினும், விரல் பூச்சு இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவரும் தற்போதைய எல்லை நிர்ணய குழுவின் தலைவருமான மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

முந்தைய ஆண்டுகளில் அவை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டாலும், கடைசியாக 2020 ஆம் ஆண்டு தேர்தலுக்காக குறித்த விரல் பூச்சுகள், உள்ளூர் உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து கடந்த அரசாங்க காலத்தில் இலங்கை மக்களுக்கு தேவையான எரிபொருள் இறக்குமதிக்காக இந்தியா 500 மில்லியன் டொலர் கடன் வசதியை வழங்கியது.

பின்னர், இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, உணவு, மருந்து, ஏற்றுமதி தொழிற்சாலைகளுக்கான மூலப்பொருட்கள் மற்றும் வேறு சில பொருட்களை வாங்குவதற்கு மேலும் ஒரு பில்லியன் டொலர் வழங்கப்பட்டது.

எவ்வாறாயினும், இந்த கடன் வசதியின் கீழ் மருந்துகள் முறையாக கட்டளையிடப்படவில்லை என கோப் குழுவில் தெரியவந்துள்ளதுடன், அதில் இரும்பை இறக்குமதி செய்யும் முயற்சி இடம்பெற்று வருவதாக சிலர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...