Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

கோலியின் கடிதத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி

T

The Leader Desk

டிசம்பர் 27, 2022 • 12:40 PM

கோலியின் கடிதத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கடிதத்தால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
  • இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இலங்கை அணி 3 டி20 மற்று 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் மோதவுள்ளன.
  • இலங்கை தொடர் இரு அணிகளுக்கும் இடையேயான 3 டி20 போட்டிகளும் ஜனவரி 3, 5 மற்றும் 7ம் திகதிகளில் நடைபெறவுள்ளன.
  • ஒருநாள் போட்டிகள் ஜனவரி 10, 12, 15ம் திகதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

கடிதத்தால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பங்காளதேச தொடரை வென்று அசத்திய இந்திய அணி அடுத்ததாக இலங்கையுடன் மோதவுள்ளது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இலங்கை அணி 3 டி20 மற்று 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் மோதவுள்ளன.

இலங்கை தொடர்

இரு அணிகளுக்கும் இடையேயான 3 டி20 போட்டிகளும் ஜனவரி 3, 5 மற்றும் 7ம் திகதிகளில் நடைபெறவுள்ளன. 3 ஒருநாள் போட்டிகள் ஜனவரி 10, 12, 15ம் திகதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தொடர் இந்த தொடர்களுக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது. புதிய தேர்வுக்குழு வராததால் சேட்டன் சர்மா தலைமையிலான பழைய தேர்வுக்குழுவே அணிக்கான வீரர்களை தெரிவு செய்ய உள்ளனர்.

அதன்படி ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, பும்ரா ஆகியோர் விளையாடுவது சந்தேகம் தான் என கூறப்படுகிறது.

கோலி எடுத்துள்ள முடிவு

இந்நிலையில் விராட் கோலி எடுத்துள்ள முடிவு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இனி டி20 துடுப்பாட்ட போட்டிகளில் இருந்து சிறிது காலம் ஓய்வு எடுத்துக்கொள்ளவுள்ளதாகவும், 50 ஓவர் துடுப்பாட்ட போட்டிகளில் மற்றும் டெஸ்ட் துடுப்பாட்ட போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்தப்போவதாக கூறியிருக்கிறார்.

இதனால் இலங்கை டி20 தொடரில் கோலி நிச்சயம் ஆடப்போவதில்லை என தெரியவந்துள்ளது.

34 வயதாகும் விராட் கோலி டி20 உலகக்கோப்பைக்கு பின், டி20 துடுப்பாட்ட போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாகவும் மற்ற வடிவ போட்டிகளில் மட்டுமே ஆட வைக்கவுள்ளதாகவும் பிசிசிஐ-யிடம் இருந்து தகவல் வெளியானது.

ஹர்திக் பாண்டியா தலைவராக

ஆனால் முக்கியமான போட்டிகளின் போது அணிக்கு திரும்புவார் என கூறப்படுகிறது.

விராட் கோலியோடு சேர்த்து ரோகித் சர்மாவுக்கும் இதே நிலைமை தான் உள்ளது. 36 வயதாகும் அவர் முழு ஓய்வையே அறிவிப்பார் என தெரிகிறது.

மேலும் ஜனவரியில் வரவுள்ள இலங்கை தொடரின் முதலே ஹர்திக் பாண்டியா தலைவராக செயல்படுவார் என தகவல்கள் கசிந்துள்ளன. 

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...