Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

யாழ்ப்பாணத்தில் ஒன்றுகூடிய தமிழ்த் தேசிய கட்சிகள்

T

The Leader Desk

டிசம்பர் 26, 2022 • 2:09 PM

யாழ்ப்பாணத்தில் ஒன்றுகூடிய தமிழ்த் தேசிய கட்சிகள்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஒன்றாகக் களமிறங்குவது தொடர்பில் நாம் அனைவருடனும் கலந்துரையாடி இறுதி முடிவெடுப்போம்.
  • அதேவேளை ஜனாதிபதியுடனான பேச்சும் தமிழர் அபிலாஷைகளை வெல்லக் கூடியதாக இருக்கவேண்டும் என்பதுதான் தமிழ்த் தேசியக் கட்சிகளின் நிலைப்பாடு.
  • இதனைவிட மேலதிகமாக எதையும் கூறி இந்த முயற்சியை நான் குழப்ப விரும்பவில்லை" என்று, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
எழுத்து அளவு:

செய்தி. உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஒன்றாகக் களமிறங்குவது தொடர்பில் நாம் அனைவருடனும் கலந்துரையாடி இறுதி முடிவெடுப்போம். இதனைவிட மேலதிகமாக எதையும் கூறி இந்த முயற்சியை நான் குழப்ப விரும்பவில்லை" என்று, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரனின் இல்லத்தில் தமிழ்த் தேசிய கட்சிகளின் தலைவர் நேற்றுமுன்தினம் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியிருந்தனர்.

இது தொடர்பில் கூட்டமைப்பின் தலைவரின் நிலைப்பாட்டை கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

"அரசியல் தீர்வு, ஜனாதிபதியுடனான பேச்சு, உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக அறிந்தேன். இன்னும் பல விடயங்களை அவர்கள் கதைத்திருக்கக் கூடும்.

அரசியல் தீர்வு தொடர்பில் தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தும் ஒரு நிலைப்பாட்டிலேயே உள்ளன. அதேவேளை ஜனாதிபதியுடனான பேச்சும் தமிழர் அபிலாஷைகளை வெல்லக் கூடியதாக இருக்கவேண்டும் என்பதுதான் தமிழ்த் தேசியக் கட்சிகளின் நிலைப்பாடு.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் தமிழ்க் கட்சிகள் அனைத்தும் ஒன்றாகப் போட்டியிடுவது அதிக நன்மை என்ற விடயமும் கலந்துரையாடப்பட்டுள்ளது. இது பேச்சளவில் உள்ளது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பங்காளிகள் இது தொடர்பில் கலந்துரையாடி இறுதி முடிவு எடுப்பார்கள். ஏனைய தமிழ்க் கட்சிகளுடனும் கலந்துரையாடி இறுதி முடிவு எடுப்போம். இதனை விட மேலதிகமான கருத்துக்களை வெளியிட்டு குழப்ப விரும்பவில்லை" - என்றார்.

இலங்கைத் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன், புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ஈ.பி.ஆர்.எல்.எவ். அமைப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் ந.சிறீகாந்தா மற்றும் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் நேற்றுமுன்தினம் நடைபெற்ற சந்திப்பில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

யாழ்ப்பாணத்தில் ஒன்றுகூடிய தமிழ்த் தேசிய கட்சிகள் | Tamil Leader | We Lead the Nation