Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

'தமிழர் பிரச்சினையைத் தீர்க்காது அரசியல் தீர்வைப் பெற முடியாது'

T

The Leader Desk

டிசம்பர் 22, 2022 • 1:27 PM

'தமிழர் பிரச்சினையைத் தீர்க்காது அரசியல் தீர்வைப் பெற முடியாது'

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தமிழர்களின் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்த்து அரசியல் தீர்வைக் காண்பதே எனது நோக்கம்" என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
  • “இந்த விவகாரத்துடன் தொடர்புபட்ட அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளைத் தமிழ்த் தரப்பினருடன் கலந்துரையாட வழிசமைத்துள்ளேன்.
  • "தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் பேச்சுக்கள் சுமுகமாக ஆரம்பமாகியுள்ளன.
எழுத்து அளவு:

தமிழர்களின் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்த்து அரசியல் தீர்வைக் காண்பதே எனது நோக்கம்" என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

"தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் பேச்சுக்கள் சுமுகமாக ஆரம்பமாகியுள்ளன. தமிழ்த் தரப்பினரின் கோரிக்கைகள் சாதகமாகப் பரிசீலிக்கப்படுகின்றன.

“சம்பந்தன், சுமந்திரன், விக்னேஸ்வரன் போன்ற தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்னிடம் முன்வைத்த கோரிக்கைகளைப் படிப்படியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுத்துள்ளேன்.

“இந்த விவகாரத்துடன் தொடர்புபட்ட அமைச்சர்கள்  மற்றும் அதிகாரிகளைத் தமிழ்த் தரப்பினருடன் கலந்துரையாட வழிசமைத்துள்ளேன். தமிழர்களின் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்க்காமல் அரசியல் தீர்வைக் காண முடியாது.

“எனவே, குறிப்பிட்ட காலவரையறைக்குள் தமிழர்களின் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்த்து அரசியல் தீர்வைக் காண்பதே எனது நோக்கம். பிறக்கும் புத்தாண்டு நல்லதொரு ஆண்டாக - அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் ஆண்டாக அமையும் என நம்புகின்றேன்" என்று, ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

'தமிழர் பிரச்சினையைத் தீர்க்காது அரசியல் தீர்வைப் பெற முடியாது' | Tamil Leader | We Lead the Nation