Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

தமிழர் உரிமைக்கான அமைதிப் போராட்டத்தில் உயிர்நீத்த திலீபனுக்கு நினைவேந்தல்!

T

The Leader Desk

செப்டம்பர் 16, 2022 • 2:49 AM

தமிழர் உரிமைக்கான அமைதிப் போராட்டத்தில் உயிர்நீத்த திலீபனுக்கு நினைவேந்தல்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • திலீபன் என அழைக்கப்படும் தமிழீழ விடுதலைப் புலிகளின் லெப்.கேணல் இராசையா பார்த்திபனின் நினைவேந்தல் வாரம் வடக்கில் ஆரம்பமாகியுள்ளது.
  • ஆம் ஆண்டு நல்லூர் கந்தசாமி கோவிலுக்கு அருகாமையில் உயிரிழந்த திலீபனை நினைவுகூரும் வகையில் அரச பாதுகாப்புப் படையினரால் இடித்துத் தள்ளப்பட்ட திலீபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக அவரது 35ஆவது நினைவு தினம் செப்டெம்பர் 15ஆம் திகதி வியாழக்கிழமை சிறப்பாக அனுசரிக்கப்பட்டது.
  • தமிழ் மக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட இந்த நினைவேந்தல் நிகழ்வு 35 வருடங்களுக்கு முன்னர் திலீபனின் நீரும் அருந்தா உண்ணா நோன்பு ஆரம்பமானதை நினைவுகூர்ந்து "மகாவீர பண்டிதர்" அன்னை அவர்களால் காலை 9.45 மணியளவில் தீபமேற்றி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
  • திலீபனின் உண்ணா நோன்பு அஹிம்சை தேசத்து ஆட்சியாளர்களின் காதில் விழாததால், பன்னிரண்டாம் நாள் (26.9.1987) மண்ணை விட்டுப் பிரிந்தார் திலீபன்.
எழுத்து அளவு:


திலீபன் என அழைக்கப்படும் தமிழீழ விடுதலைப் புலிகளின் லெப்.கேணல் இராசையா பார்த்திபனின் நினைவேந்தல் வாரம் வடக்கில் ஆரம்பமாகியுள்ளது.

2010ஆம் ஆண்டு நல்லூர் கந்தசாமி கோவிலுக்கு அருகாமையில் உயிரிழந்த திலீபனை நினைவுகூரும் வகையில் அரச பாதுகாப்புப் படையினரால் இடித்துத் தள்ளப்பட்ட திலீபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக அவரது 35ஆவது நினைவு தினம் செப்டெம்பர் 15ஆம் திகதி வியாழக்கிழமை சிறப்பாக அனுசரிக்கப்பட்டது.

தமிழ் மக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட இந்த நினைவேந்தல் நிகழ்வு 35 வருடங்களுக்கு முன்னர் திலீபனின் நீரும் அருந்தா உண்ணா நோன்பு ஆரம்பமானதை நினைவுகூர்ந்து "மகாவீர பண்டிதர்" அன்னை அவர்களால் காலை 9.45 மணியளவில் தீபமேற்றி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

லெப்.கேணல் இராசையா பார்த்திபன் உண்ணாவிரதத்தை ஆரம்பித்த இடத்தில் "மகாவீர தமிழ் ஈழவன்" தாயார் தீபமேற்றி வைத்ததாக மாகாண செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

35 வருடங்களுக்கு முன்னர், திலீபன் பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராகப் போராடியவர், அது இன்று தென்னிலங்கையில் செயற்பாட்டாளர்களை குறிவைத்து பயன்படுத்தப்படுகிறது.

தமிழ் மாகாணங்களில் இருந்து சிங்கள இராணுவத் தளங்களைத் திரும்பப் பெறுதல், தமிழ் மாகாணங்களில் தற்காலிகத் தமிழ் அரசாங்கம் அமையும் வரை புனர்வாழ்வுப் பணிகளை தற்காலிகமாக இடைநிறுத்துதல், தமிழ் மாகாணங்களுக்குச் சொந்தமான கிராமங்களில் சிங்களவர்களைக் குடியமர்த்துவதை நிறுத்துதல், தமிழ் மாகாணங்களில் சிங்களப் பொலிஸ் நிலையங்கள் அமைப்பதை நிறுத்துதல், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு, இன்னமும் தடுப்புக்காவலில் அல்லது சிறைகளில் உள்ளோர் விடுவிக்கப்பட வேண்டும் என்ற ஐந்து அம்ச கோரிக்கைகளை பாரத தேசத்திடம் முன்வைத்து 1987 செப்டம்பர் 15 அன்று, திலீபன் உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்.

திலீபனின் உண்ணா நோன்பு அஹிம்சை தேசத்து ஆட்சியாளர்களின் காதில் விழாததால், பன்னிரண்டாம் நாள் (26.9.1987) மண்ணை விட்டுப் பிரிந்தார் திலீபன்.

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களும் நேற்று காலை 9.45 மணியளவில் பல்கலைக்கழக மைதானத்தில் தியாகி திலீபனை நினைவு கூருவதற்கு ஏற்பாடு செய்திருந்தனர். 

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...