Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

வழங்கிய வாக்குறுதியை மாற்ற முடியாது - சஜித்துக்கு ஜனாதிபதி பதில்!

T

The Leader Desk

மே 12, 2022 • 4:12 AM

வழங்கிய வாக்குறுதியை மாற்ற முடியாது - சஜித்துக்கு ஜனாதிபதி பதில்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பிரதமர் பதவியை ஏற்கத் தயார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு நேற்று (12) பிற்பகல் அனுப்பி வைத்துள்ள கடிதத்திற்கு பதிலளிக்கும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
  • எவ்வாறாயினும், பாராளுமன்றத்தில் 113 பெரும்பான்மையுடன் பிரதமர் பதவியை கோருமாறு ஜனாதிபதி எதிர்க்கட்சித் தலைவருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
  • நேற்று முன்தினம் (11) நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ஜனாதிபதி, பாராளுமன்றத்தில் பெரும்பான்மையினரின் நம்பிக்கையை பெற்று மக்களின் நம்பிக்கையை பலப்படுத்தக்கூடிய பிரதமரும் அமைச்சரவையும் இந்த வாரத்தில் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.
எழுத்து அளவு:



பிரதமர் பதவியை ஏற்கத் தயார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு நேற்று (12) பிற்பகல் அனுப்பி வைத்துள்ள கடிதத்திற்கு பதிலளிக்கும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலையில் பிரதமராக பதவியேற்குமாறும், அரசாங்கத்தை அமைக்குமாறும் எதிர்க்கட்சித் தலைவரையே தான் முதலில் அழைத்ததாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அதன் பின்னர், முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் பிரதமர் பதவியை ஏற்குமாறு தாம் விடுத்த கோரிக்கைக்கு சாதகமான பதில் கிடைக்கப் பெற்றதன் காரணமாகவே பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், பாராளுமன்றத்தில் 113 பெரும்பான்மையுடன் பிரதமர் பதவியை கோருமாறு ஜனாதிபதி எதிர்க்கட்சித் தலைவருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

நேற்று முன்தினம் (11) நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ஜனாதிபதி, பாராளுமன்றத்தில் பெரும்பான்மையினரின் நம்பிக்கையை பெற்று மக்களின் நம்பிக்கையை பலப்படுத்தக்கூடிய பிரதமரும் அமைச்சரவையும் இந்த வாரத்தில் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.

19 ஆவது திருத்தச் சட்டத்தின் உள்ளடக்கங்களை மீள அமுல்படுத்தும் வகையில் அரசியலமைப்பை திருத்தியமைப்பதற்கு பாராளுமன்றத்திற்கு அதிக அதிகாரம் கிடைக்கும் வகையில் செயற்படுவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...