Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

ஊடக அடக்குமுறையை கண்டிக்கும் உழைக்கும் ஊடகவியலாளர் சங்கம்

T

The Leader Desk

பிப்ரவரி 14, 2022 • 11:19 AM

ஊடக அடக்குமுறையை கண்டிக்கும் உழைக்கும் ஊடகவியலாளர் சங்கம்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இதுகுறித்து அந்த அமைப்பு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
  • துமிந்த சம்பத், தலைவர் பிராங்க் டி சொய்சா , செயலாளர் ஊடகவியலாளர் சமுதித்த வீட்டின் மீது நடத்தப்பட் தாக்குதல் வீட்டில் தான் உறங்கிக் கொண்டிருந்த போது தாக்குதல் நடத்தப்படும் ​​பெரும் சத்தம் கேட்டே விழித்தெழுந்ததாக ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரம தெரிவித்துள்ளார்.
  • நாட்டில் ஊடக சுதந்திரத்துக்கு இவ்வாறு கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி, ஊழல் மற்றும் மோசடிகளில் ஈடுபடும் நபர்களை பாதுகாப்பதே இத்தகைய தாக்குதல்களின் நோக்கம் என்பது தெளிவாகின்றது.
எழுத்து அளவு:


இதுகுறித்து அந்த அமைப்பு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

ஊடக அறிக்கை

ஊடகவியலாளர் சமுதித்த சமரவிக்கிரமவின் வீடுமீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கின்றோம்


ஊடகவியலாளர் சமுதித்த சமரவிக்கிரமவின் வீடுமீது ஆயுதம் தாங்கிய நபர்களால், பெப்ரவரி 14 ஆம் திகதி அதிகாலை நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதலை இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கின்றது.

நாட்டில் ஊடக சுதந்திரத்துக்கு இவ்வாறு கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி, ஊழல் மற்றும் மோசடிகளில் ஈடுபடும் நபர்களை பாதுகாப்பதே இத்தகைய தாக்குதல்களின் நோக்கம் என்பது தெளிவாகின்றது. ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டமை, காணாமல் ஆக்கப்பட்டமை, தாக்கப்பட்டமை மற்றும் ஊடக நிறுவனங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் முறையான விசாரணைகளை முன்னெடுத்து, நீதியை நிலைநாட்டுமாறு வலியுறுத்தி ‘கறுப்பு ஜனவரி’ நினைவுகூரப்பட்டு ஒரு மாதம் நிறைவடைவதற்குள் இத்தகையதொரு தாக்குதல் இடம்பெற்றுள்ளமை ஊடக சமூகத்துக்கு விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தலாகவே அமைந்துள்ளது.

ஊடக நிறுவனங்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு எதிராக கடந்த காலங்களில் குற்றங்கள் இழைத்தவர்கள் இன்னும் சட்டத்தின்முன் நிறுத்தப்படாமல், சுதந்திரமாக உலா வருவதும் இப்படியான தாக்குதலுக்கு ஆசிர்வாதமாக அமைவதாக எமது சங்கம் கருதுகின்றது.

ஊடகவியலாளர் சமுதித சமரவிக்கிரவின் வீடுமீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்து, குற்றவாளிகளை சட்டத்தின்முன் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

சமுதித சமரவிக்கிரமவின் ஊடகப் பணி தொடர்பில் ஏதேனும் தரப்பினருக்கு பிரச்சினை இருப்பின், அது தொடர்பில் நாட்டின் சட்டத்திற்கு அமைவாக உரிய அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்ய வேண்டும். அதைவிடுத்து ஊடக சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் விடுக்கும் விதத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள இத்தகைய கோழைத்தனமான தாக்குதல்லை எமது சங்கம் வன்மையாகக் கண்டிகின்றது. இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க இலங்கையிலும் சர்வதேச அளவிலும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகைள மேற்கொள்ள எமது சங்கம் தயங்காது.

துமிந்த சம்பத்,
தலைவர்

பிராங்க் டி சொய்சா ,
செயலாளர்

1402 SLWJA

ஊடகவியலாளர் சமுதித்த வீட்டின் மீது நடத்தப்பட் தாக்குதல்

வீட்டில் தான் உறங்கிக் கொண்டிருந்த போது தாக்குதல் நடத்தப்படும் ​​பெரும் சத்தம் கேட்டே விழித்தெழுந்ததாக ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரம தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவின் வீட்டிற்கு வந்த ஆயுதம் தாங்கிய குழுவொன்று அவரை அச்சுறுத்தும் வகையில் வீட்டின் மீது தாக்குதல் நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே ஊடகவியலாளர் சமுதித இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், குறித்த தாக்குதல் காரணமாக வீட்டின் பல ஜன்னல்கள் சேதமடைந்துள்ளன.

வீடு முழுவதும் மலத்தால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எனினும் இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் யாரையும் பெயரிட முடியாது என சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் இந்த தாக்குதல் தொடர்பான சிசிடீவி காணொளிகள் கிடைக்கப் பெற்றுள்ள நிலையில், சம்பவம் தொடர்பான தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...