Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

இந்தியாவின் தேவைக்கு TNA செயற்படுவதாக குற்றச்சாட்டு!

T

The Leader Desk

ஜனவரி 24, 2022 • 11:27 AM

இந்தியாவின் தேவைக்கு TNA செயற்படுவதாக குற்றச்சாட்டு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் கீழ் மாகாண சபைகளை நிறுவி, அதிகாரப் பகிர்வை உறுதிப்படுத்த இந்திய அரசாங்கம் தலையிட வேண்டும் எனக் கோரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அண்மையில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரிடம் கோரிக்கையொன்றை முன்வைத்தது.
  • “34 வருடங்களுக்கு முன்னர் 1987ஆம் ஆண்டு இலங்கை நாடாளுமன்றத்தில் 13ஆவது திருத்தச் சட்டமும் மாகாண சபைச் சட்டமும் நிறைவேற்றப்பட்டது.
  • “யுத்தம் முடிவடைந்த பின்னர் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அனைத்து தமிழ் தேசியக் கட்சிகளின் தலைவர்களையும் சந்தித்து 13வது திருத்தத்தை ஏற்றுக்கொள்ளுமாறு கோரினார்.
  • இதனை அறிந்தே தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறி 11 வருடங்களாக மக்களுக்கு விளக்கமளித்தோம்.
எழுத்து அளவு:

இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் கீழ் மாகாண சபைகளை நிறுவி, அதிகாரப் பகிர்வை உறுதிப்படுத்த இந்திய அரசாங்கம் தலையிட வேண்டும் எனக் கோரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அண்மையில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரிடம் கோரிக்கையொன்றை முன்வைத்தது.

“34 வருடங்களுக்கு முன்னர் 1987ஆம் ஆண்டு இலங்கை நாடாளுமன்றத்தில் 13ஆவது திருத்தச் சட்டமும் மாகாண சபைச் சட்டமும் நிறைவேற்றப்பட்டது. அந்தச் சந்தர்ப்பத்தில் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக இருக்கும் ஆர். சம்பந்தன் அன்று தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியில் இருந்தார். 13வது திருத்தத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டாம் என்று ராஜீவ் காந்திக்கு. ஆர்.சம்பந்தன், TNA தலைவர் சிற்றம்பலம், அமிர்தலிங்கம், கடிதம் எழுதினர். அன்று நிறுத்த நினைத்ததை இன்று ஏற்பதற்கு காரணம் என்ன என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேள்வியெழுப்பியுள்ளார்.

வவுனியாவில் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திர குமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

34 வருடங்களுக்கு முன்னர் மக்களால் நிராகரிக்கப்பட்ட 13வது திருத்தச் சட்டத்தைஇ தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்ட பின்னரும் அமுல்படுத்துமாறு கோருவது நியாயமானதல்ல என கஜேந்திரகுமார் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

“யுத்தம் முடிவடைந்த பின்னர் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அனைத்து தமிழ் தேசியக் கட்சிகளின் தலைவர்களையும் சந்தித்து 13வது திருத்தத்தை ஏற்றுக்கொள்ளுமாறு கோரினார். அதுதான் இப்போது வந்திருக்கிறது. இதனை அறிந்தே தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறி 11 வருடங்களாக மக்களுக்கு விளக்கமளித்தோம். இப்போது அது வெளிப்படையாக நடக்கிறது. இதனை நாம் எதிர்க்கிறோம். 13வது திருத்தச் சட்டம் ஒற்றையாட்சிக்குள் செயற்படும் ஒன்று” என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் தெரிவித்துள்ளார்.

ஒற்றையாட்சியின் சின்னமான சிங்கக்கொடி இலங்கையின் சுதந்திர தினம் என அனைத்து சிங்கள பௌத்த ஆதிக்கங்களையும் நிராகரித்து போராடிய தமிழ் மக்களின் தேசிய அரசியலை மாற்றியமைக்கும் முயற்சி என்று அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒற்றையாட்சியில் தமிழர்கள் மீதான அடக்குமுறைக்கு எதிராக நாங்கள் செயல்பட்டு வருகிறோம் என்றும் அவர் கூறினார்.

தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்திய-இலங்கை உடன்படிக்கைக்கு எதிராக தெற்கில் ஆயுதமேந்திய போராட்டத்திய நடத்திய போது, தேசப்பற்றுள்ள மக்கள் இயக்கத்தின் கூட்டாளியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்  தலைவராகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இலங்கை இராணுவத்தின் மாத்தளை மாவட்ட இணைப்பாளராகவும் இருந்தனர். இவர்கள் தமிழ் மக்களின் போராட்டத்தை ஒடுக்குவதில் முன்னின்று செயற்பட்டனர்.' என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...