Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

விக்கி, மனோ, வெல்கம ஆகியோரின் கட்சிகளுக்கு அங்கீகாரம்!

T

The Leader Desk

ஜனவரி 11, 2022 • 6:44 AM

விக்கி, மனோ, வெல்கம ஆகியோரின் கட்சிகளுக்கு அங்கீகாரம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி, மனோ கணேசன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி, குமார வெல்கம தலைமையிலான புதிய ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியனே பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளாக பெயரிடப்பட்டுள்ளன.
  • இதேவேளை, புதிய புள்ளிவிபரங்களுக்கமைய இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை 79ஆக அதிகரித்துள்ளது.
  • இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் கட்டளைச் சட்டத்தின் கீழ், தொடர்ச்சியாக மூன்று அமர்வுகள் அல்லது 90 நாட்களுக்கு தொடர்ச்சியாக பதவியை இழந்த உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் ஒருவரை மீண்டும் நியமிக்க முடியாது என ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
எழுத்து அளவு:

முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி, மனோ கணேசன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி, குமார வெல்கம தலைமையிலான புதிய ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியனே பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளாக பெயரிடப்பட்டுள்ளன.

மனோ கணேசனின் ஜனநாயக மக்கள் முன்னணி, பழனி திகாம்பரம் தலைமையிலான தொழிலாளர் தேசிய சங்கம், வீ.இராதாகிருஸ்ணன் தலைமையிலான மலையக மக்கள் முன்னணி ஆகியன இணைந்தே தமிழ் முற்போக்குக் கூட்டணியை ஸ்தாபித்திருந்தது. எவ்வாறாயினும், முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரம் மற்றும் மனோ கணேசன் ஆகியோருக்கிடையே வெளிவராத பனிப்போர் ஒன்று ஏற்பட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது.

இதேவேளை, புதிய புள்ளிவிபரங்களுக்கமைய இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை 79ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, புதிய அரசியல் கட்சிகளைப் பதிவுசெய்ய விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

2020ஆம் ஆண்டி;கான அரசியல் கட்சிகளைப் பதிவுசெய்வதற்கான விண்ணப்ப்களைக் கோருவதற்கு தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் கட்டளைச் சட்டத்தின் கீழ், தொடர்ச்சியாக மூன்று அமர்வுகள் அல்லது 90 நாட்களுக்கு தொடர்ச்சியாக பதவியை இழந்த உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் ஒருவரை மீண்டும் நியமிக்க முடியாது என ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...