Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

'முஸ்லிம் அரசியல் தலைமைகள் வெவ்வேறு முகங்களைக் காட்டுகின்றன' - கலையரசன்!

T

The Leader Desk

ஏப்ரல் 21, 2021 • 10:33 AM

'முஸ்லிம் அரசியல் தலைமைகள் வெவ்வேறு முகங்களைக் காட்டுகின்றன' - கலையரசன்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அம்பாறை திருக்கோவில் 04 தமிழரசுக் கட்சியின் வட்டாரக் கிளை நிருவாக தெரிவு கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை (20) கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்படி கருத்தினை தெரிவித்தார்.
  • ஆனால், பௌத்த விகாரை ஒன்று அமைப்பது என்றால் சட்டரீதியாக அனுமதிகள் வழங்கப்படுகின்ற நிலைமையில் தான் தற்போது சட்டம் காணப்படுகின்றன.
  • தொடர்ந்து அவர் உரையாற்றுகையில், இந்த நாட்டில் சிறுபாண்மை மக்கள் தமது இறை வழிபாடுகளைக் கூட சுதந்திரமாக முன்னெடுக்க முடியாத நிலைமைகள் காணப்படுகின்றன.
எழுத்து அளவு:

அம்பாறை  திருக்கோவில் 04 தமிழரசுக் கட்சியின் வட்டாரக் கிளை நிருவாக தெரிவு கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை (20) கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்படி கருத்தினை தெரிவித்தார்.

 தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்,

இந்த நாட்டில் சிறுபாண்மை மக்கள் தமது இறை வழிபாடுகளைக் கூட சுதந்திரமாக முன்னெடுக்க முடியாத நிலைமைகள் காணப்படுகின்றன. இந்து ஆலயம் ஒன்றினை அமைக்க வேண்டுமானால் நீண்ட கால குத்தகையில் காணிகள் பெற வேண்டியுள்ளது.

ஆனால், பௌத்த விகாரை ஒன்று அமைப்பது என்றால் சட்டரீதியாக அனுமதிகள் வழங்கப்படுகின்ற நிலைமையில் தான் தற்போது சட்டம் காணப்படுகின்றன. இங்கு ஜனநாயகம் இல்லை என்றே நான் கூறுகின்றேன்.

இவ்வாறான நிலைமைகள் மாற்றப்பட வேண்டும்.  வடகிழக்கு உட்பட நாட்டில் அனைத்து பகுதிகளிலும் வாழும் தமிழ் பேசும் சமூகம் சுதந்திரமாகவும் நீதியாகவும் வாழ்வதற்கான ஜனநாயகத்தை கேட்டு போராடுகின்ற நிலையில் எங்களது தமிழ்

பேசுகின்ற உறவுகளாக இருக்கின்ற முஸ்லிம் அரசியல் தலைமைகள் எமக்கு ஒரு முகமும் அரசுக்கு ஒரு முகமும் காட்டுகின்ற நிலையில் தமிழ் முஸ்லிம் சமூகத்தை ஒற்றுமைப்படுத்த முடியாத சூழ்நிலையில் தமிழ் பேசும் சமூகம் பாரிய உரிமை ரீதியான பின்னடைவுகளைச் சந்திக்க நேரிடும் எனத் தெரிவித்தார்.

 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...