Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

கர்தினாலின் கருத்தினால் மகிழ்ச்சியடையும் முஸ்லிம்கள்!

T

The Leader Desk

ஏப்ரல் 19, 2021 • 10:34 AM

கர்தினாலின் கருத்தினால் மகிழ்ச்சியடையும் முஸ்லிம்கள்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஆனால் அந்த இருவரும் அதன் சூத்திரதாரிகள் அல்ல என்றும், உண்மையான சூத்திரதாரிகள் இன்னமும் கைது செய்யப்படவில்லை என்றும், குறித்த நபர்கள் தனக்கு தெரியும் என்ற ரீதியில் கார்டினல் மல்கம் ரஞ்சித் அவர்கள் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
  • அதேநேரம் நேற்று அதாவது 18.04.2021 அன்று ஈஸ்டர் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு நினைவுச்சின்னத்தை திறந்துவைக்கும் நிகழ்வில் உரை நிகழ்த்தும்போது “”தங்கள் அரசியல் சக்தியை வலுப்படுத்தவே உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் ஒரு குழுவினரால் நடாத்தப்பட்டது.
  • இந்த முரண்பாடான அறிக்கைகள் அனைத்தையும் ஒன்றாக தொகுத்து ஆராய்ந்தால் மயக்கம் விழும் நிலை ஏற்படும்.
எழுத்து அளவு:

ஆனால் அந்த இருவரும் அதன் சூத்திரதாரிகள் அல்ல என்றும், உண்மையான சூத்திரதாரிகள் இன்னமும் கைது செய்யப்படவில்லை என்றும், குறித்த நபர்கள் தனக்கு தெரியும் என்ற ரீதியில் கார்டினல் மல்கம் ரஞ்சித் அவர்கள் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

அதாவது அரசாங்கம் அறிவித்த இருவரது பெயர்களையும் நிராகரிப்பதகவே  அவரது அறிக்கை அமைந்திருந்தது.

அதேநேரம் நேற்று அதாவது 18.04.2021 அன்று ஈஸ்டர் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு நினைவுச்சின்னத்தை திறந்துவைக்கும் நிகழ்வில் உரை நிகழ்த்தும்போது “”தங்கள் அரசியல் சக்தியை வலுப்படுத்தவே உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் ஒரு குழுவினரால் நடாத்தப்பட்டது. இந்த தாக்குதலை நடாத்தியது மத தீவிரவாதம் அல்ல.”” என்று கூறியுள்ளார்.

அத்துடன் “”தமது அரசியல் அதிகாரத்தினை வலுப்படுத்திக் கொள்வதற்காக ஏனையவர்களை கொலை செய்யும் சிந்தனையிலிருந்து விடுபடுங்கள்”” என்ற கார்டினல் மல்கம் ரஞ்சித் அவர்களின் அறிவுரை மிகவும் சிந்திக்கத்தக்கதும், வரவேற்கத்தக்கதுமாகும்.

ஈஸ்டர் தாக்குதல் நடைபெற்றதிலிருந்து இன்று வரைக்கும் அதுபற்றிய அரசியல்வாதிகளின் அறிக்கைகள் ஒன்றுக்கொன்று முரணாகவே இருந்து வருகின்றது. இந்த முரண்பாடான அறிக்கைகள் அனைத்தையும் ஒன்றாக தொகுத்து ஆராய்ந்தால் மயக்கம் விழும் நிலை ஏற்படும்.

குண்டுத்தாக்குதலை நடாத்தியது இந்தியா என்று ஜனாதிபதி ஆணைக்குழுவில் வாக்குமூலம் வழங்கிய அதே வாயினால் பின்னாட்களில் இந்தியாவை காப்பாற்றும் நோக்கில் கருத்துக்கள் அமைந்திருந்ததுடன், அது வேறு ஒரு பொதுவான முஸ்லிம்களின் எதிரி நாட்டின்மீது விரல் நீட்டப்பட்டதனையும் காணக்கூடியதாக உள்ளது.

யாராக இருந்தாலும் குற்றவாளிகள் தண்டிக்கப்படல் வேண்டும். ஆனால் யாரோ செய்த குற்றத்திற்காக எதுவுமறியாத முழு அப்பாவி முஸ்லிம் சமூகத்தையும் சந்தேகிப்பதோ அல்லது தண்டிக்க முற்படுவதோ கூடாது.

எனவே ஈஸ்டர் தாக்குதலை காரணமாகக்கொண்டு முஸ்லிம்கள் மீது மாற்றான் தாய் மனப்பான்மையில் சட்டங்களை இயற்றி தண்டிக்க முற்படுகின்ற இன்றைய காலத்தில், கர்தினால் மல்கம் ரஞ்சித் அவர்களின் அறிக்கையானது முஸ்லிம் சமூகத்துக்கு ஓர் ஆறுதலாக அமைகின்றது.

முகம்மத் இக்பால்

சாய்ந்தமருது 

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

கர்தினாலின் கருத்தினால் மகிழ்ச்சியடையும் முஸ்லிம்கள்! | Tamil Leader | We Lead the Nation