Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

தொலைக்காட்சி ஊடாக கற்றல் நடவடிக்கை!

T

The Leader Desk

ஏப்ரல் 6, 2020 • 1:53 PM

தொலைக்காட்சி ஊடாக கற்றல் நடவடிக்கை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கொரோனா வைரஸ் தாக்க சவாலை ​வெற்றிக்கொள்ள முன்னெடுக்கும் திட்டங்களை பலவீனப்படுத்த வேண்டாம் என்றும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
  • இந்த சவாலையும் வெற்றிக் கொள்ள வேண்டும் என தெரிவித்த அவர், தேசிய உற்பத்திகளை வலுப்படுத்த அரசாங்கம் பல திட்டங்களை வகுத்துள்ளது என கூறினார்.
  • இதற்கமைய ஏப்ரல் 9 ஆம் திகதி தேசிய மட்டத்தில் நாடுத்தழுவிய ரீதியாக வீட்டுத் தோட்ட பயிர்ச்செய்கையில் அனைவரும் ஈடுபட பயிர்ச்செய்கைக்கான கன்றுகள் இலவசமாக வழங்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
எழுத்து அளவு:

கொவிட் 19 நோய் தொற் றை தடுப்பு தொடர்பாக மாத்தறையில் கடந்த 3 ஆம் திகதி நடைபெற்ற எதிர்கட்சி உறுப்பினர்களுடபான சந்திப்பின் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், மாணவர்களின் நலனை கருத்திற் கொண்டு ஏப்ரல் 20 ஆம் திகதி தொடக்கம் தொலைக்காட்சி ஊடாக தமிழ் மற்றும் சிங்கள மொழியில் கற்றல் நடவடிக்கைகளை முன்னெடுக்க இரண்டு பிரத்தியேக அலைவரிசைகளை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

கொரோனா வைரஸ் தாக்க சவாலை ​வெற்றிக்கொள்ள முன்னெடுக்கும் திட்டங்களை பலவீனப்படுத்த வேண்டாம் என்றும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பூகோள மட்டத்தில் உணவு பற்றாக்குறை ஏற்படும். இந்த சவாலையும் வெற்றிக் கொள்ள வேண்டும் என தெரிவித்த அவர், தேசிய உற்பத்திகளை வலுப்படுத்த அரசாங்கம் பல திட்டங்களை வகுத்துள்ளது என கூறினார்.

இதற்கமைய ஏப்ரல் 9 ஆம் திகதி தேசிய மட்டத்தில் நாடுத்தழுவிய ரீதியாக வீட்டுத் தோட்ட பயிர்ச்செய்கையில் அனைவரும் ஈடுபட பயிர்ச்செய்கைக்கான கன்றுகள் இலவசமாக வழங்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

தற்போதைய சூழ்நிலையில், உணவுப் பிரச்சினைக்கு தீர்வுகாணும் வகையில் கிராமிய மட்டத்தில் உற்பத்தி நடவடிக்கைகளை ஆரம்பிக்க வேண்டியது மிக முக்கியமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...