Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

இஸ்லாமியர்களின் உடல்களை இறுதிக்கிரியைகள் செய்வதற்கு பிரதமரினால் விசேட குழு! கொங்ரீட் இட ஆலோசனை

T

The Leader Desk

ஏப்ரல் 3, 2020 • 11:20 AM

இஸ்லாமியர்களின் உடல்களை இறுதிக்கிரியைகள் செய்வதற்கு பிரதமரினால் விசேட குழு! கொங்ரீட் இட ஆலோசனை

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கொரோனா வைரஸினால் இலங்கையில் மரணமான இரண்டாவது நபர் முஸ்லிமாவர் அவரின் நல்லடக்கம் இஸ்லாமிய முறைப்படி அல்லாமல் அவரது சடலம் எரிக்கப்பட்டது.
  • அதனடிப்படையில் கொரோனா வைரஸினால் இறக்கும் இஸ்லாமியர்களின் உடல்கலை நல்லடக்கம் செய்வது பற்றி ஆலோசனை நடைபெறுகின்றது. விஞ்ஞான ரீதியாக இறந்த உடல்களை நல்லடக்கம் செய்வது பற்றி ஆராயும் கட்சித் தலைவர்களின் விசேட குழுக் கூட்டம் கடந்த 2ம் திகதி பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் இடம்பெற்றது.
  • இதன் போது கொரோன வைரஸ் தொற்றால் இறந்து போன முஸ்லிம்களின் உடல்கள் குடும்ப அங்கத்தவர்கள் சிலருக்கு முன்னால் நல்லடக்கம் செய்ய வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

கொரோனா வைரஸினால் இலங்கையில் மரணமான இரண்டாவது நபர் முஸ்லிமாவர் அவரின் நல்லடக்கம் இஸ்லாமிய முறைப்படி அல்லாமல் அவரது சடலம் எரிக்கப்பட்டது. இதன்போது முஸ்லிம் மக்கள் மத்தியில் ஒருவித கவலையும் கருத்தாடலும் உருவாகியுள்ளது.

அதனடிப்படையில் கொரோனா வைரஸினால் இறக்கும் இஸ்லாமியர்களின் உடல்கலை நல்லடக்கம் செய்வது பற்றி ஆலோசனை நடைபெறுகின்றது. 

விஞ்ஞான ரீதியாக இறந்த உடல்களை நல்லடக்கம் செய்வது பற்றி ஆராயும் கட்சித் தலைவர்களின் விசேட குழுக் கூட்டம் கடந்த 2ம் திகதி பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் இடம்பெற்றது.

இக்கூட்டத்திற்கு முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைவர்களான ரவுப் ஹக்கீம்  ரிசாத் பதியுதீன் முஜிபுர் ரஹ்மான் பைசர் முஸ்தபா அலிசாகிர் மௌலான ஆகியோர் கலந்து கொண்டனர் .

இதன் போது கொரோன வைரஸ் தொற்றால் இறந்து போன முஸ்லிம்களின் உடல்கள்  குடும்ப அங்கத்தவர்கள் சிலருக்கு முன்னால் நல்லடக்கம் செய்ய வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. விஞ்ஞான ரீதியாக இதனை பரிசீலனை செய்ய விசேட குழு ஒன்றும் நியமிக்கப்படவுள்ளது.

இந்த யோசனைக்கு பிரதமர் உடன்படுவதாகவும் விரைவாக அந்த குழு நியமிக்கப்பட வேண்டும் என்றும் இஸ்லாமிய முறைப்படி நல்லடக்கம் செய்ய பிரதமர் உறுதி வழங்கியுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

குழிகளை கொங்ரீட் இடுவதற்கான ஆலோசனை

இவ்வேளையில் இறந்த உடல்களை நல்லடக்கம் செய்யும் போது குழிகளை கொங்ரீட் இட்டு மறைக்க வேண்டும் என முஸ்லிம் அரசியல் தலைவர்களுக்கும் மதத் தலைவர்களுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆலோசனையை அமுல்படுத்துவதற்காக விரைவாக தங்களது கருத்துக்களை  கூறும்படியும் ஆராய்ச்சி செய்யும் அதிகாரம் அந்த குழுக்களுக்கு வழங்கப்படவுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...