Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

மஹிந்தானந்த அளுத்கமகேவின் இனத்துவேசத்தின் உச்சக்கட்டம்!

T

The Leader Desk

ஏப்ரல் 2, 2020 • 6:00 AM

மஹிந்தானந்த அளுத்கமகேவின் இனத்துவேசத்தின் உச்சக்கட்டம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இதன்போது நிகழ்ச்சி தொகுப்பாளர் 'சத்துர' உங்கள் பகுதியில் தற்போதைய கொரொனா தொடர்பான நிலைப்பாடு என்ன?
  • ஆகவே இந்த நிகழ்விலிருந்து சில விடயங்களை கேள்விகளாக நாம் நோக்கவேண்டியுள்ளது.
  • என்று முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேயிடம் வினவியபோது ஒருவர் அக்குரணை பகுதியில் அடையாளம் காணப்பட்டார்.
எழுத்து அளவு:

இதன்போது நிகழ்ச்சி தொகுப்பாளர் 'சத்துர' உங்கள் பகுதியில் தற்போதைய கொரொனா தொடர்பான நிலைப்பாடு என்ன? என்று முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேயிடம் வினவியபோது ஒருவர் அக்குரணை பகுதியில் அடையாளம் காணப்பட்டார். மேலும் அவரை விசாரணைக்குட்படுத்தியதில் அவர் சென்று வந்த இடங்கள் சிலவற்றை அடையாளம் கண்டிருக்கிறோம். மேலும் மூன்று பேர் கொரோனா தொற்று காரணமாக அடையாளம் காணப்பட்டிருக்கிறார்கள் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் தொடர்கிறது என்று சொல்லிக்கொண்டே....

அந்த பேச்சுக்கு எந்தவித தொடர்பும் இல்லாமல் சட்டென.....

இதுவரை ஒன்பது பேர் அடையாளம் காணப்பட்டவர்கள் இன்று இனம்காணப்பட்ட பத்து பேருடன் சேர்த்து மொத்தம் பத்தொன்பது (19) "முஸ்லிம்கள்" கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருக்கிறார்கள் என்று கூரினார்

இதன்போது நிகழ்ச்சித் தொகுப்பாளர் சத்துர' சட்டென சொல்லிக்கொடுத்து கேட்டது போல குறுக்கிட்டு இந்த இடத்தில் முஸ்லிம்களான ஒரு இனத்தை சாடுவது பிழையான கருத்து இதனால் பல்வேறுபட்ட பிரச்சனைகள் ஏற்கனவே ஏற்பட்டுள்ளது என தெரிவிக்க..

தன்னை சுதாகரித்துக்கொண்ட முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த தடுமாற்றத்துடன் அவரது மொழிநடையில் "ஏகொள்ளு (முஸ்லிம்கள்) விதரக் நெமேய் சத்துர அபே சிங்ஹலாயத் கியனதே அஹன்னே! ஏக விதர நெமே அபே ஆயத் கொடக் கொரோனா ஹெதிலா இன்னவா" (அவர்கள் மட்டுமல்ல சத்துர எங்கட சிங்கள ஆட்களும் சொல்வதை கேட்பதில்லை எங்களுடையவர்களும் நிறையபேர் நோய்தொற்றுக்கு உள்ளாகியிருக்கிறார்கள்) என்று மழுப்பியதை காணமுடிந்தது.

ஆகவே இந்த நிகழ்விலிருந்து சில விடயங்களை கேள்விகளாக நாம் நோக்கவேண்டியுள்ளது.

1. இந்த நிகழ்ச்சி ஏற்கனவே பேசி ஒழுங்கு செய்யப்பட்ட ஒன்றா?

2. அரசாங்கம் ஆட்சியை ஸ்திரப்படுத்த இவர்களைப்போன்ற நயவஞ்சகர்களின் மூலம் இனவாதம் பேசி மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொள்ள திரைமறைவில் நடாத்தப்படும் நாடகமா?

3. எப்போதும் இனவாதம் பேசும் நிகழ்ச்சி தொகுப்பாளர் 'சத்துர மஹிந்தானந்தவின் கருத்தை மறுத்து பேசியதன் மர்மம் என்ன?

4. அல்லது வழமையாகவே ஒரு இனவாத ஊடகமாக வலம் வரும் தெரண தொலைக்காட்சி இனத்துவேசம் இருந்தால் அப்படி மறுத்து பேசுவார்களா? என்று எமக்குள்ளே ஒரு கேள்வியை தொடுக்கக்கூடிய ஒரு தந்திரோபாயமா? இப்படி பல கேள்விகளை தொடுக்கலாம்...

எது எப்படியோ எதிர்காலத்தில் நாவலப்பிட்டி முஸ்லிம் மக்கள் இந்த மஹிந்தானந்த போன்ற "எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றுகின்ற இன வெறியர்களை அடையாளம் கண்டு தக்க பாடத்தை புகட்ட வேண்டும் என்பதே காலத்தின் தேவையாகும்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

மஹிந்தானந்த அளுத்கமகேவின் இனத்துவேசத்தின் உச்சக்கட்டம்! | Tamil Leader | We Lead the Nation