Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

மத்திய மாகாணத்தில் அக்குரனை பிரதேசத்தைச் சேர்ந்த முதலாவது கொரோனா நோயாளர்!

T

The Leader Desk

மார்ச் 28, 2020 • 6:07 PM

மத்திய மாகாணத்தில் அக்குரனை பிரதேசத்தைச் சேர்ந்த முதலாவது கொரோனா நோயாளர்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இவ்வாறு இனங்காணப்பட்டவர் அக்குரனை பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
  • குறித்த நபர் கடந்த 15 ம் திகதி இந்தியாவிலிருந்து சென்னை வழியாக இலங்கை வந்தவர் என்றும் இவர் இந்தியாவிலிருந்து வந்த விடயம் தொடர்பாக எவருக்கும் அறிவிக்கவில்லை.
  • இவர் இன்று (28) கண்டி வைத்தியசாலைக்கு காய்ச்சல் காரணமாக சென்ற பின்பே இவருக்கு கொவிட் 19 வைரஸ் பரவியிருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
  • அதனை தொடர்ந்து குறித்த நபர் ஐ.டி.எச் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
எழுத்து அளவு:

இவ்வாறு இனங்காணப்பட்டவர் அக்குரனை பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த நபர் கடந்த 15 ம் திகதி இந்தியாவிலிருந்து சென்னை வழியாக இலங்கை வந்தவர் என்றும் இவர் இந்தியாவிலிருந்து வந்த விடயம் தொடர்பாக எவருக்கும் அறிவிக்கவில்லை. என்றும் குறித்த நபர் தனிமை படுத்தலுக்கு உட்படுத்தப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

இவர் இன்று (28) கண்டி வைத்தியசாலைக்கு காய்ச்சல் காரணமாக சென்ற பின்பே இவருக்கு கொவிட் 19 வைரஸ் பரவியிருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து குறித்த நபர் ஐ.டி.எச் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபரின் இரு பிள்ளைகளுக்கும் மனைவிக்கும் கொரோனா வைரஸ் பரவியிருக்கலாம் என சந்தேகம் படுவதாகவும் இது குறித்து மருத்துவ அறிக்கையினை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கொரோனா தொற்று பரவிய குறித்த நபர் யார் யாருடன் தொடர்பு வைத்திருந்தார் என்பது தொடர்பாக பொலிஸாரும் சுகாதார பிரிவினரும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

எனவே கொரோனா கொவிட் 19 வைரஸினை இலங்கையில் கட்டுப்படுத்த வேண்டும் என நினைத்தால் அது பொது மக்கள் ஒத்துழைப்பின் மூலம் செய்ய முடியும் என்பதனை திரும்ப திரும்ப வலியுறுத்தியும் அதனை கவனத்தில் கொள்ளாது அலட்சியமாக இருப்பது கவலையளிக்கிறது என சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...