Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

கொரோனா வைரஸ் சென்னையில் இருந்து வந்தவர்களுக்கு இலங்கையில் கட்டுப்பாடு!

T

The Leader Desk

மார்ச் 28, 2020 • 6:01 PM

கொரோனா வைரஸ் சென்னையில் இருந்து வந்தவர்களுக்கு இலங்கையில் கட்டுப்பாடு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இதன்படி, இலங்கையில் இன்றைய தினமும் நால்வர் புதிதாக வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவிக்கின்றது.
  • நாட்டில் இதுவரை 110 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களில் 9 பேர் குணமடைந்து தமது வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக அந்த பணியகத்தின் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
  • இந்த நிலையில், 101 பேர் தொடர்ந்தும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
  • அத்துடன், கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் 199 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
எழுத்து அளவு:

இதன்படி, இலங்கையில் இன்றைய தினமும் நால்வர் புதிதாக வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவிக்கின்றது.

நாட்டில் இதுவரை 110 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களில் 9 பேர் குணமடைந்து தமது வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக அந்த பணியகத்தின் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

இந்த நிலையில், 101 பேர் தொடர்ந்தும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்துடன், கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் 199 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

மலையகத்தில் முதலாவது கொரோனா தொற்று

இந்திய வம்சாவளித் தமிழர்கள் அதிகளவில் வாழும் மலையக பகுதியில் இன்று முதலாவது கொரோனா தொற்றுக்குள்ளான நபர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

கண்டி தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒருவருக்கே இந்த தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டதாக மருத்துவமனையின் பணிப்பாளர் டொக்டர் சமன் ரத்நாயக்க பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

அக்குரணை - தெலம்புகஹவத்தை பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கே இந்த தொற்று ஏற்பட்டுள்ளது.

கண்டியில் இன்று அடையாளம் காணப்பட்ட நபர், மேலதிக சிகிச்சைகளுக்காக அங்கொடை ஐ.டி.எச் தொற்று நோய் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இன்றைய தினம் புதிதாக அடையாளம் காணப்பட்ட நால்வரில் இருவர், இந்தியாவின் சென்னை நகரிலிருந்து இலங்கைக்கு வருகைத் தந்தவர்கள் என சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

அதேபோன்று, கடந்த சில தினங்களுக்கு முன்னரும் சென்னையிலிருந்து வருகைத் தந்த இருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த 14 நாட்களுக்குள் யாராவது சென்னையிலிருந்து இலங்கைக்கு வருகைத் தந்திருக்கும் பட்சத்தில், அவர்கள் பிரதேசத்தின் சுகாதார அதிகாரிகளை சந்தித்து விடயங்களை தெளிவூட்டுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

சுகாதார தரப்பினர் தகவல்களின் பிரகாரம், சுய கண்காணிப்புக்கு உள்ளாகுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேவேளை, இலங்கையில் ஏற்கனவே இந்திய பிரஜையொருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதுடன், அவர் தொடர்ந்தும் இலங்கையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இத்தாலி மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளிலிருந்து வருகை தந்து, கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டவர்கள் கண்காணிப்பின் பின்னர் தமது வீடுகளை நோக்கி பயணித்து வருகின்றனர்.

ராணுவத்தின் கீழ் இந்த கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன்படி, பொலன்னறுவை - வெலிகந்த கண்காணிப்பு மத்திய நிலையத்திலிருந்து இன்றைய தினம் 60திற்கும் அதிகமானோர் தமது வீடுகளை நோக்கி பயணித்துள்ளதாக ராணுவம் தெரிவிக்கின்றது.

அத்துடன், பூனானை கண்காணிப்பு நிலையத்திலிருந்து 78 பேர் அடங்கிய மற்றுமொரு குழுவினர் தமது வீடுகளை நோக்கி பயணித்துள்ளனர்.

மேலும், ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து வருகைத் தந்து, வவுனியாவில் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்ட 167 பேர் இன்று தமது வீடுகளை நோக்கி சென்றுள்ளனர்.

5000 திற்கும் அதிகமானோர் கைது

இலங்கையில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்ட நிலையில், அதனை மீறிய குற்றச்சாட்டின் கீழ் 5386 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், 1358 வாகனங்களை போலீஸார் தமது பொறுப்பிற்கு எடுத்துள்ளதாக போலீஸார் குறிப்பிடுகின்றனர்.

கடந்த 20ஆம் தேதி முதல் இன்று நண்பகல் வரையான காலப் பகுதியில் நடத்தப்பட்ட சுற்றி வளைப்புக்களின் போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம், கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்கள் மறு அறிவித்தல் வரை முடக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய மாவட்டங்களுக்கு ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

கொரோனா அச்சுறுத்தல் அதிகளவில் காணப்படும் யாழ்ப்பாணம், கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களை தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு இடைக்கிடை ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டு, அந்த பகுதிகளுக்கு மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...