Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

ஊரடங்கு சட்டத்தை மீறி செயற்படும் நபர்களுக்கு எதிராக இன்று முதல் கடுமையான சட்ட நடவடிக்கை இராணுவ தளபதி!

T

The Leader Desk

மார்ச் 28, 2020 • 12:09 PM

ஊரடங்கு சட்டத்தை மீறி செயற்படும் நபர்களுக்கு எதிராக இன்று முதல் கடுமையான சட்ட நடவடிக்கை இராணுவ தளபதி!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஊரடங்கு சட்டத்தை மீறி செயற்படும் நபர்களுக்கு எதிராக இன்று முதல் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென அவர் குறிப்பிட்டார்.
  • மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வீடுகளுக்கு விநியோகிப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
  • அவ்வாறு அரசாங்கத்திற்கு சரியான ஒத்துழைப்பை வழங்கினால் குறுகிய காலத்தில் கொவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸை நாட்டில் இருந்து ஒழிப்பதற்கு முடியுமென கொவிட் 19 ஒழிப்பு தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிரதானி, இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
எழுத்து அளவு:

ஊரடங்கு சட்டத்தை மீறி செயற்படும் நபர்களுக்கு எதிராக இன்று முதல் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென அவர் குறிப்பிட்டார்.

கொழும்பு உள்ளிட்ட பிரதேசங்களில் அதிகளாவான மக்கள் ஊரடங்கு சட்டம் அமுலில் இல்லாத வகையில் வீதிகளில் நடமாடுவதை காணக்கூடியதாக இருந்ததாகவும் இராணுவ தளபதி தெரிவித்தார். எனினும் தொடர்ந்தும் இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்ள முடியாது. ஊரடங்கு சட்டம் மற்றும் தனிமைப்படுத்தல் சட்டத்தை அமுல்படுத்தி கொரோனா வைரஸை நாட்டில் இருந்து ஒழிப்பதே பிரதான நோக்கமாகும். எனினும் இவ்வாறு அசம்பந்த போக்குடன் மக்கள் செயற்படுவதால் தனிமைப்படுத்தல் சட்டத்தை பொலிஸார் கடுமையாக நடைமுறைப்படுத்த உள்ளதாக இராணுவ தளபதி குறிப்பிட்டார்.

இதற்கான ஒத்துழைப்பை பொலிஸாருக்கு முப்படையினர் வழங்க உள்ளதாகவும் இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வீடுகளுக்கு விநியோகிப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இருவருக்கிடையில் பேண வேண்டிய இடைவெளி தொடர்பிலும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. தேவையற்ற காரணங்களுக்காக வீதிகளில் இறங்க வேண்டாமெனவும் வீடுகளுக்குள் இருந்து சுய தனிமைப்படுத்தலை மேற்கொள்ளுமாறும் ஆலோசணை வழங்கப்பட்டுள்ளது.

இவையனைத்தையும் மதிக்காது செயற்பட்டமையால் இதுவரை காலமும் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் நீரில் அடித்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், வைத்தியர்களின் ஆலோசணைக்கமைய தங்களது வீடுகளிலிருந்து சுய தனிமைப்படுத்தலை முன்னெடுத்து அரசாங்கம் மேற்கொள்ளும் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா கோரிக்கை விடுத்துள்ளார்.

அவ்வாறு அரசாங்கத்திற்கு சரியான ஒத்துழைப்பை வழங்கினால் குறுகிய காலத்தில் கொவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸை நாட்டில் இருந்து ஒழிப்பதற்கு முடியுமென கொவிட் 19 ஒழிப்பு தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிரதானி, இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...