Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த முன்னாள் ராணுவ சார்ஜன்ட் விடுதலை!

T

The Leader Desk

மார்ச் 26, 2020 • 1:52 PM

மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த முன்னாள் ராணுவ சார்ஜன்ட் விடுதலை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கொழும்பு - வெலிகடை சிறைச்சாலையிலிருந்து இன்று முற்பகல் அவர் வெளியேறியதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் ஜயசிறி தென்னக்கோன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
  • யாழ்ப்பாணம் - மிருசுவில் பகுதியில் 2000ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19ஆம் தேதி தமது வீடுகளை பார்வையிட சென்ற பொதுமக்கள் ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு, சுட்டுக் கொலை செய்யப்பட்டதாக குற்றஞ்சுமத்தப்பட்டது.
  • அதனைத் தொடர்ந்து, சம்பவம் தொடர்பில் 14 ராணுவ உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டிருந்ததுடன், அவர்கள் தொடர்பிலான விசாரணைகளை போலீஸார் மற்றும் ராணுவ போலீஸார் முன்னெடுத்தனர்.
  • யாழ்ப்பாணம் - சாவகச்சேரி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டதுடன், பின்னரான காலத்தில் பிணையில் விடுவிக்கப்பட்டு விசாரணைகள் நடத்தப்பட்டன.
எழுத்து அளவு:

கொழும்பு - வெலிகடை சிறைச்சாலையிலிருந்து இன்று முற்பகல் அவர் வெளியேறியதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் ஜயசிறி தென்னக்கோன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

குறித்த சார்ஜன்ட் யுத்த காலத்தில் முன்னெடுத்த சிறந்த சேவை மற்றும் நன்னடத்தை ஆகியவற்றை கருத்திற் கொண்டு இந்த பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்க தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாணம் - மிருசுவில் பகுதியில் 2000ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19ஆம் தேதி தமது வீடுகளை பார்வையிட சென்ற பொதுமக்கள் ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு, சுட்டுக் கொலை செய்யப்பட்டதாக குற்றஞ்சுமத்தப்பட்டது.

இவ்வாறு கொலை செய்யப்பட்ட எட்டு பேரில் ஐந்து வயது மதிக்கத்தக்க சிறு குழந்தையொன்றும் அடங்குவதாக கூறப்படுகின்றது.

யுத்தக் காலத்தில் கைவிடப்பட்ட தமது வீடுகளை பார்வையிடுவதற்கு ராணுவத்தின் அனுமதியுடன் சென்ற பொதுமக்களே மீள திரும்பவில்லை என குற்றஞ்சுமத்தப்பட்டது.

இந்த சம்பவத்தின் போது, காயங்களுடன் தப்பியோடிய பொன்னுதுரை மகேஷ்வரன் என்ற நபர் வழங்கிய தகவல்களின் பிரகாரம், உயிரிழந்தவர்களில் சடலங்களை போலீஸார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து, சம்பவம் தொடர்பில் 14 ராணுவ உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டிருந்ததுடன், அவர்கள் தொடர்பிலான விசாரணைகளை போலீஸார் மற்றும் ராணுவ போலீஸார் முன்னெடுத்தனர்.

யாழ்ப்பாணம் - சாவகச்சேரி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டதுடன், பின்னரான காலத்தில் பிணையில் விடுவிக்கப்பட்டு விசாரணைகள் நடத்தப்பட்டன.

அதனைத் தொடர்ந்து, குறித்த வழக்கு விசாரணைகள் அநுராதபுரம் மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டதுடன், சட்ட மாஅதிபரினால் ஐந்து பேருக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் சட்ட மாஅதிபரினால் கொழும்பில் மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றமொன்று நிறுவப்பட்டதுடன், அங்கு விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளது.

இதன்படி, 2015ஆம் ஆண்டு ஜுன் மாதம் 24ஆம் தேதி விசாரணைகளை நடத்திய நீதிபதிகளினால் சார்ஜன்ட் ஆர்.எம்.சுனில் ரத்நாயக்கவிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

அத்துடன், குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட ஏனைய நான்கு ராணுவத்தினரும் போதிய ஆதாரங்கள் இல்லாமையினால் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், யாழ்ப்பாணம் - மிருசுவில் படுகொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ராணுவ சார்ஜன்ட் ஆர்.எம்.சுனில் ரத்நாயக்க ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் இன்று விடுதலை செய்யப்பட்டார்.

குறித்த ராணுவ சார்ஜன்ட்க்கு பொதுமன்னிப்பு வழங்குவதற்கான ஆவணத்தில் ஜனாதிபதி ஏற்கனவே கையெழுத்திட்டிருந்த நிலையில், இந்த அசாதாரண சூழ்நிலைக்கு மத்தியில் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக இந்த வழக்கில் தமிழர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் குறிப்பிடுகின்றனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...