Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

கொரோனா வைரஸ்: ஒலிம்பிக் போட்டிகள் தள்ளிவைக்கப்படுவது இது முதல் முறையா?

T

The Leader Desk

மார்ச் 24, 2020 • 3:25 PM

கொரோனா வைரஸ்: ஒலிம்பிக் போட்டிகள் தள்ளிவைக்கப்படுவது இது முதல் முறையா?

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சீனா, இத்தாலிக்கு அடுத்து அதிகபட்சமாக அமெரிக்காவில்தான் அதிக பேர் கொரோனா தொற்றால் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.
  • அங்கு மட்டும் 46,450 பேர் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.
  • இந்த ஆண்டு ஜூலை 24 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 9 ஆம் தேதி வரை நடப்பதாக இருந்தது ஒலிம்பிக் போட்டிகள்.
  • பாலஸ்த்தீனத்தில் கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்வது சவாலாக உள்ளதாக உலக சுகாதார அமைப்பு கூறி உள்ளது.
எழுத்து அளவு:

சீனா, இத்தாலிக்கு அடுத்து அதிகபட்சமாக அமெரிக்காவில்தான் அதிக பேர் கொரோனா தொற்றால் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். அங்கு மட்டும் 46,450 பேர் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

ஒலிம்பிக் போட்டிகள்

கொரோனா தொற்று காரணமாக ஒலிம்பிக் போட்டிகள் ஓராண்டுக்குத் தள்ளி வைக்கப்படுகின்றது.

இந்த ஆண்டு ஜூலை 24 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 9 ஆம் தேதி வரை நடப்பதாக இருந்தது ஒலிம்பிக் போட்டிகள்.

கொரோனா அச்சம் காரணமாக கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் தங்கள் வீரர்களை ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப மாட்டோம் எனக் கூறி இருந்தன.

ஜப்பான் அரசும் ஒலிம்பிக் போட்டிகளைத் தள்ளி வைக்கும்படி கோரி இருந்தது.

இந்த நிலையில் ஒலிம்பிக் அமைப்பு போட்டிகளை ஓராண்டு தள்ளி வைக்க ஒப்புக் கொண்டுள்ளது.

செய்தியாளர்களிடம் பேசிய ஜப்பான் பிரதமர் அபே, "சர்வதேச ஒலிம்பிக் குழு போட்டிகளைத் தள்ளி வைக்க ஒப்புக் கொண்டது," என்றார்.

ஒலிம்பிக் போட்டிகள் தள்ளிவைக்கப்படுவது இதுவே முதல் முறை.

இதற்கு முன்பாக ஒலிம்பிக் போட்டி போர் காலத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால், தள்ளி வைக்கப்படுவது இதுவே முதல் முறை.

பாலஸ்த்தீனத்தின் நிலைமை என்ன?

பாலஸ்த்தீனத்தில் கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்வது சவாலாக உள்ளதாக உலக சுகாதார அமைப்பு கூறி உள்ளது.

உலகத்தில் குறுகிய இடத்தில் மக்கள் அடர்த்தியாக வாழும் இடங்களில் காஸா பகுதியும் ஒன்று.

2007ஆம் ஆண்டு ஹமாஸ் கட்டுப்பாட்டில் இந்த பகுதி சென்றதிலிருந்து இந்த பகுதியை இஸ்ரேலும், எகிப்தும் முடக்கி உள்ளது.

இப்படியான சூழலில் அங்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது சிரமமாக இருப்பதாக உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.

ஆனால் அதே நேரம் அந்த பகுதி பல ஆண்டு காலமாகத் தனிமைப்படுத்தப்பட்டே வருகிறது. இதன் காரணமாக அங்கு கொரோனா பரவல் அபாயம் குறைவாக உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

கொரோனா தடுப்பு பணிகளுக்காக அடுத்த ஆறு மாத கால பாலஸ்த்தீனத்தி ற்கு 150 மில்லியன் டாலர்களைத் தருவதாக கத்தார் உறுதி அளித்துள்ளது.

இஸ்ரேலின் நிலை?

இஸ்ரேல் முழுமையாக முடக்கப்பட உள்ளது. மக்கள் உணவு, மருத்துவத்திற்கு மட்டுமே வெளியே வர அனுமதிக்கப்படுகிறார்கள். இதனை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க இருப்பதாக அந்நாடு அறிவித்துள்ளது.

கொலம்பியா தலைநகரான பொகொடாவில் உள்ள மிகப்பெரிய சிறையொன்றில் கொரோனா அச்சம் காரணமாக அங்குள்ள கைதிகள் சிரையிலிருந்து தப்பிக்க முடிவு செய்தனர். அப்போது ஏற்பட்ட கலவரத்தில் 23 பேர் உயிரிழந்தனர். 83 கைதிகள் காயம் அடைந்தனர்.

சிறைச்சாலையில் சுகாதார குறைபாடு காரணமாகவே அங்கு கலவரம் ஏற்பட்டுள்ளதாக வரும் தகவல்களை அந்நாட்டு சட்ட அமைச்சர் மறுத்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

கொரோனா வைரஸ்: ஒலிம்பிக் போட்டிகள் தள்ளிவைக்கப்படுவது இது முதல் முறையா? | Tamil Leader | We Lead the Nation