Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

கொரோனா பாதிப்பால் மரணவீதம் அதிகரித்து கொண்டே செல்கிறது!

T

The Leader Desk

மார்ச் 21, 2020 • 10:00 AM

கொரோனா  பாதிப்பால் மரணவீதம் அதிகரித்து கொண்டே செல்கிறது!  

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இந்நிலையில், சிங்கப்பூரில் இன்று முதல் மரணம் பதிவாகியுள்ளது.
  • சிங்கப்பூரை சேர்ந்த 75 வயது மூதாட்டியும் இந்தோனேசியாவை சேர்ந்த 64 வயது முதியவரும் கொரோனா வைரஸ் பாதிப்பால் அங்கு உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
  • இத்தாலியில்தான் அதிகபட்சமாக 4,032 பேர் பலியாகி உள்ளனர்.
  • கொரோனா வைரஸின் தோற்றுவாயாக இருந்த சீனாவில் மரண எண்ணிக்கை 3,139ஆக உள்ளது.
எழுத்து அளவு:

இந்நிலையில், சிங்கப்பூரில் இன்று முதல் மரணம் பதிவாகியுள்ளது. சிங்கப்பூரை சேர்ந்த 75 வயது மூதாட்டியும் இந்தோனேசியாவை சேர்ந்த 64 வயது முதியவரும் கொரோனா வைரஸ் பாதிப்பால் அங்கு உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்த இருவரும் கொரோனா பாதிப்பு தாக்கப்படும் முன்பே உடல் நிலை சரியில்லாமல் இருந்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

இத்தாலியில்தான் அதிகபட்சமாக 4,032 பேர் பலியாகி உள்ளனர். கொரோனா வைரஸின் தோற்றுவாயாக இருந்த சீனாவில் மரண எண்ணிக்கை 3,139ஆக உள்ளது.

அடுத்தடுத்த இடங்களில் இரானும், ஸ்பெயினும் உள்ளன. இரானில் 1,433 பேரும், ஸ்பெயினில் 1,093 பேரும் பலியாகி உள்ளனர்.

இளைஞர்களை எச்சரிக்கு உலக சுகாதார நிறுவனம்

இப்படியான சூழலில் இளைஞர்களை உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

உலக சுகாதார நிறுவனத்தின் தலைமையகமான ஜெனிவாவிலிருந்து இணையம் மூலமாக உரையாற்றிய அதன் தலைமை இயக்குநர் டெட்ரோஸ், "இளைஞர்களே உங்களுக்கு ஒரு செய்தி உள்ளது. நீங்கள் வெல்ல முடியாதவர்கள் அல்ல. உங்களையும் இந்த வைரஸ் வாரக்கணக்காக மருத்துவமனையில் இருக்க வைக்கலாம் அல்லது நீங்கள் மரணிக்கக் காரணமாக அமையலாம். கவனமாக இருங்கள். வயதானவர்களுடன் தொடர்பு கொள்வதைத் தவிருங்கள்," என்றார்.

சர்வதேச அளவில் வயதானவர்கள்தான் கோவிட் 19 வைரஸ் தொற்று காரணமாக அதிகளவில் பலியாகி இருக்கின்றனர்.

இத்தாலியில் வைரஸ் தொற்று காரணமாகப் பலியானவர்களின் சராசரி வயது 78.5.

சீனாவில் பலியானவர்களில் 1 சதவீதம் பேர்தான் 50 வயதுக்கும் கீழ் உள்ளவர்கள். இறந்தவர்களில் 15 சதவீதம் பேர் 80 வயதுக்கும் மேல் உள்ளவர்கள்.

ஐக்கிய ராஜ்ஜியம்: இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்து ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய ஐக்கிய ராஜ்ஜியத்தில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் தேநீர் விடுதிகள், மதுபான விடுதிகள் மற்றும் உணவகங்கள் மூடப்படும் எனப் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.

அமெரிக்கா: கனடா மற்றும் மெக்சிகோ உடனான தனது எல்லையை மூட உத்தரவிட்டுள்ளது அமெரிக்கா. சனிக்கிழமை இரவு முதல் அந்த பாதையில் போக்குவரத்து தடை செய்யப்படும். ஆனால், அதே நேரம் வணிக தேவைகளுக்கான போக்குவரத்து வழக்கம் போல இயங்கும்.

கொரோனா காரணமாக அமெரிக்காவில் மட்டும் 230 பேர் பலியாகி உள்ளனர். 18,500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஸ்பெயின்: தேவையில்லாமல் அல்லது காரணமில்லாமல் வீதியில் நடமாடுபவர்களை ராணுவம் கைது செய்யும் என ஸ்பெயின் அரசாங்கம் எச்சரித்துள்ளது.

இந்தோனீஷியா: இந்தோனீஷியா தலைநகர் ஜகார்த்தாவில் ஊரடங்கு உத்தரவு பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் நிலைமை இவ்வாறாக இருக்க கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 88,210 பேர் குணமடைந்துள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவிக்கிறது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...