Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவனை விபத்துக்குள்ளாக்கிய மாணவர்கள் கைது!

T

The Leader Desk

மார்ச் 12, 2020 • 6:38 AM

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவனை விபத்துக்குள்ளாக்கிய மாணவர்கள் கைது!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இவர்களில் சில்லை பயன்படுத்தி விபத்தை ஏற்படுத்திய மாணவனும் அடங்குவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
  • ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவ பிரிவில் முதலாம் ஆண்டில் கல்வி கற்கும் பசிந்து ஹிருசான் கடந்த 05 ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் காயமடைந்தார்.
  • இந்த நிலையில் விபத்து தொடர்பில் மிரிஹான பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில் நேற்று விபத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் 5 மாணவர்களை கைது செய்துள்ளனர்.
  • கைதான மாணவர்களை இன்று (12) நுகேகொடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எழுத்து அளவு:

இவர்களில் சில்லை பயன்படுத்தி விபத்தை ஏற்படுத்திய மாணவனும் அடங்குவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்தை எதிர்நோக்கிய பசிந்து ஹிருசான் தொடர்ந்தும் தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவ பிரிவில் முதலாம் ஆண்டில் கல்வி கற்கும் பசிந்து ஹிருசான் கடந்த 05 ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் காயமடைந்தார்.

பசிந்து ஹிருசானின் தலைப் பகுதியில் கடுமையாக காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் அவர் உயிராபத்தை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுவதுடன் அவருக்கு தொடர்ந்தும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

எனினும் அவருக்கு இதுவரை சுயநினைவு திரும்பவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில் விபத்து தொடர்பில் மிரிஹான பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில் நேற்று விபத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் 5 மாணவர்களை கைது செய்துள்ளனர்.

கைதான மாணவர்களை இன்று (12) நுகேகொடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, மாணவனுக்கு சிகிச்சை அளிக்க, தேவைப்படின் ஜனாதிபதி நிதியத்தில் பணம் பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் உயர் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் குறித்த சம்பவத்தை பகிடிவதை என பிழையாக சிலர் அர்த்தப்படுத்தி வருவதாக முன்னிலை சோசலிச கட்சியின் பிரச்சார செயலாளர் துமிந்த நாகமுவ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பல்கலைக்கழக நிர்வாக அதிகாரியின் நடவடிக்கையால் இவ்வாறான சம்பவம் இடம்பெற்றுள்ளதாக முன்னாள் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைகழகத்தின் ஒழுக்காற்று குழு உறுப்பினர் பாடக்க குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்தும் இடம்பெறுவதை தடுக்க பல்கலைக்கழகங்களில் சிவில் குழுக்களை அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் கேட்டுக்கொள்வதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...