Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட முதல் இலங்கையர் !

T

The Leader Desk

மார்ச் 3, 2020 • 10:28 AM

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட முதல் இலங்கையர் !

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இத்தாலியில் வசிக்கும் இலங்கையர் ஒருவருக்கே இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக இத்தாலிக்கான இலங்கை தூதரகத்தின் பதில் கொன்ஷல் ஜெனரல் பிரபாஷினி பொன்னம்பெரும பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.
  • குறித்த இலங்கை பெண் கடமையாற்றிய வீட்டின் உரிமையாளருக்கு முதலில் கொவிட் 19 வைரஸ் தொற்று ஏற்பட்டிருந்ததாக கூறிய அவர், அதனைத் தொடர்ந்தே, இலங்கை பணிப் பெண்ணுக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
  • ஹொரணை பகுதியைச் சேர்ந்த 46 வயதான பெண்ணொருவரே இந்த வைரஸ் தொற்றுக்கு இல்லாகியுள்ளார்.
  • குறித்த பெண் சிகிச்சை பெற்று வரும் வைத்தியசாலையினால் இந்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இத்தாலிக்கான இலங்கை தூதரகத்தின் பதில் கொன்ஷல் ஜெனரல் பிரபாஷினி பொன்னம்பெரும தெரிவித்தார்.
எழுத்து அளவு:

இத்தாலியில் வசிக்கும் இலங்கையர் ஒருவருக்கே இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக இத்தாலிக்கான இலங்கை தூதரகத்தின் பதில் கொன்ஷல் ஜெனரல் பிரபாஷினி பொன்னம்பெரும பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

இத்தாலியின் பிரேஸியா பகுதியிலுள்ள வீடொன்றில் பணிப் பெண்ணாக கடமையாற்றிய வந்த நிலையிலேயே குறித்த இலங்கை பெண்ணுக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

குறித்த இலங்கை பெண் கடமையாற்றிய வீட்டின் உரிமையாளருக்கு முதலில் கொவிட் 19 வைரஸ் தொற்று ஏற்பட்டிருந்ததாக கூறிய அவர், அதனைத் தொடர்ந்தே, இலங்கை பணிப் பெண்ணுக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஹொரணை பகுதியைச் சேர்ந்த 46 வயதான பெண்ணொருவரே இந்த வைரஸ் தொற்றுக்கு இல்லாகியுள்ளார்.

குறித்த பெண் தற்போது இத்தாலியின் பிரேஸியா நகரிலுள்ள சிவிலி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

குறித்த பெண் சிகிச்சை பெற்று வரும் வைத்தியசாலையினால் இந்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இத்தாலிக்கான இலங்கை தூதரகத்தின் பதில் கொன்ஷல் ஜெனரல் பிரபாஷினி பொன்னம்பெரும தெரிவித்தார்.

இதேவேளை, இத்தாலியிலுள்ள ஏனைய இலங்கையர்களுக்கு இந்த வைரஸ் தொற்றினால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், தாம் இத்தாலியிலுள்ள இலங்கையர்கள் குறித்து தொடர்ந்தும் அவதானித்து வருவதாக இத்தாலிக்கான இலங்கை தூதரகத்தின் பதில் கொன்ஷல் ஜெனரல் பிரபாஷினி பொன்னம்பெரும கூறினார்.

இத்தாலியில் சுமார் 104000த்திற்கும் அதிகமான இலங்கையர்கள் வாழ்ந்து வருவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவிக்கின்றது.

இவர்கள் தொடர்பில் இத்தாலியிலுள்ள தமது தூதரக அதிகாரிகள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட்டு வருவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிக்கையொன்றின் ஊடாக குறிப்பிட்டுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...