Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

அரசாங்கத்தின் ஒப்பந்தங்களுக்காக கட்சியை இரண்டாக உடைக்க முயற்சி! மங்கள

T

The Leader Desk

மார்ச் 2, 2020 • 8:41 AM

அரசாங்கத்தின் ஒப்பந்தங்களுக்காக கட்சியை இரண்டாக உடைக்க முயற்சி! மங்கள

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தலைமைகாரியாலயத்தில் நடந்த நிருவாகக் குழு கூட்டத்திலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
  • இச் சந்தர்ப்பத்தில் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தனவை பார்த்து நீங்களும் இந்த சதிகார வேலையை செய்பவர்களில் ஒருவர் என மங்கள குறிப்பிட்டுள்ளார்.
  • வரைக்கும் அதாவது 17 வருடங்கள் ஸ்ரீலங்கா சுதந்திரகட்சி எதிர்க்கட்சியில் இருந்தது அதே போன்று ஐ.தே.க இட்டுச் செல்ல சிலர் முயற்சிக்கின்றனர்.அதை முறியடித்து நாம் கட்சியை இக்கூட்டணி ஊடாக வெற்றிப்பாதையில் இட்டுச் செல்ல வேண்டும் என்றார்.
எழுத்து அளவு:

நேற்று (1) ஐ. தே. க. தலைமைகாரியாலயத்தில் நடந்த நிருவாகக் குழு கூட்டத்திலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

பல மாதங்கள் முயற்சி செய்து கூட்டணி ஒன்றை அமைத்தோம் ஆனால் சிலர் அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப செயற்பட்டு கட்சியையும் கூட்டணியையும் இரண்டாக உடைக்க முயற்சித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இச் சந்தர்ப்பத்தில் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தனவை பார்த்து நீங்களும் இந்த சதிகார வேலையை செய்பவர்களில் ஒருவர் என மங்கள குறிப்பிட்டுள்ளார்.

1977-1994 வரைக்கும் அதாவது 17 வருடங்கள் ஸ்ரீலங்கா சுதந்திரகட்சி எதிர்க்கட்சியில் இருந்தது அதே போன்று ஐ.தே.க இட்டுச் செல்ல சிலர் முயற்சிக்கின்றனர்.அதை முறியடித்து நாம் கட்சியை இக்கூட்டணி  ஊடாக வெற்றிப்பாதையில் இட்டுச் செல்ல வேண்டும் என்றார்.

சிறு சிறு காரணங்களுக்காக நாம் குழப்பமடைய தேவையில்லை என்று மங்கள சமரவீர  குறிப்பிட்டார்.

இச்சந்தர்ப்பத்தில் சமகி ஜன பலவேகய வின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார எது எப்படி இருப்பினும் எதிர்வரும் பொதுத்தேர்தலில் சஜித் தலைமையில் சமகி ஜன பலவேகயவில் போட்டியிடவுள்ளதாகவும் இதற்கு ஐக்கிய தேசிய கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்துள்ளதகவும்  அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...