Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

ரணில் இராஜினாமாச் செய்தால் பிரதமராக திணேஸ்! - மஹிந்த வேண்டாம் என்கிறாா்!!

T

The Leader Desk

நவம்பர் 19, 2019 • 5:37 PM

ரணில் இராஜினாமாச் செய்தால் பிரதமராக திணேஸ்! - மஹிந்த வேண்டாம் என்கிறாா்!!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அந்த வட்டாரங்களுக்கு அமைய மஹிந்த ராஜபக்ஸ அவ்வாறான தீர்மானத்தை மேற்கொண்டிருப்பதற்கான காரணம் புதிய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை ஒதுக்கிடும் போது தற்போது கடும் நெருக்கடி தோன்றியிருப்பதேயாகும்.
எழுத்து அளவு:

, ஐ.தே.கட்சியின் சஜித்வாதிகளின் அழுத்தங்களினால் ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியை இராஜினாமாச் செய்தால்,  பிரதமர் பதவியை பாராளுமன்ற உறுப்பினர் திணேஸ் குணவர்தனவுக்கு வழங்குவதற்கும் எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ தீர்மானித்துள்ளதாக மிக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து theleader.lk இணையத்திற்குத் தெரிய வந்துள்ளது.

அந்த வட்டாரங்களுக்கு அமைய மஹிந்த ராஜபக்ஸ அவ்வாறான தீர்மானத்தை மேற்கொண்டிருப்பதற்கான காரணம் புதிய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை ஒதுக்கிடும் போது தற்போது கடும் நெருக்கடி தோன்றியிருப்பதேயாகும்.

ஜனாதிபதி கோத்தாபயவுக்கு ஆதரவை வழங்கிய ஸ்ரீ.ல.சு.கட்சியின் உறுப்பினர்கள் ஒன்பது பேரின் பெயர்கள் அமைச்சுப் பதவிகளுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதோடு, மொட்டுக் கட்சிக்கு ஆதரவை வழங்கிய கூட்டு எதிர்கட்சியின் பெருமளவிலானோர் அமைச்சுப் பதவிகளை எதிர்பார்த்து தொடர்ந்தும் அழுத்தங்களை மேற்கொண்டு வருகின்றனர்.  எவ்வாறாயினும் ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளான மற்றும் அது தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள எவருக்கும் அமைச்சுப் பதவிகளை வழங்க வேண்டாம் என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸவின் வியத்மகவின் முக்கியஸ்தர்கள் யோசனை தெரிவித்துள்ளமை நிலைமையினை மேலும் சிக்கலுக்கு உள்ளாக்கியுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

ரணில் இராஜினாமாச் செய்தால் பிரதமராக திணேஸ்! - மஹிந்த வேண்டாம் என்கிறாா்!! | Tamil Leader | We Lead the Nation